PDF chapter test TRY NOW

\((1,5)\), \((-9, 10)\) என்பதை வரைப்படத்தாளில் எவ்வாறு குறிப்பது என்பதை அறிவோம்.
 
\((56, 78)\), \((89, 45)\) போன்ற பெரிய மதிப்புகளில் வரைய இயலுமா?
 
இயலும், வரைபடத்தாளில் \(Y\) மற்றும் \(X\) இன் பெரிய மடங்குகளாக அமையும் சூழ்நிலையில் வரைபடத்தாளில் வழக்கமாக ஓரலகுகளில் குறிக்கும் அளவு \(Y\) மற்றும் \(X\) ஆயத் தொலைவுகளுக்குப் போதுமானதாக இருக்காது.
 
இவ்வாறான சூழ்நிலைகளில் இரண்டு அச்சுகளுக்கும் தேவைக்கு ஏற்ப அளவுத்திட்டத்தை மாற்றியமைத்துப் பயன்படுத்துகின்றோம்.
 
பொருத்தமான அளவுத்திட்டத்தை வரைபடத்தாளில் வலதுபுறமூலையில் குறிப்பிடுவோம்.
Example:
1. கீழ்க்கண்ட வரைப்படத்தின் அளவுத்திட்டத்தைக் காண்க.
 
1259_13.png
 
தீர்வு:
 
கொடுக்கப்பட்ட வரைப்படத்தில் \(x\) -அச்சின் மதிப்பு \(1\) அலகாக அதிகரிக்கிறது.
 
ஆகவே, \(x\) - அச்சின் அளவுத்திட்டம் \(1\) செ.மீ \(=\) \(1\) அலகு.
 
\(y\) - அச்சின் மதிப்பு \(10\) அலகாக அதிகரிக்கிறது.
 
எனவே, \(y\) - அச்சின் அளவுத்திட்டம் \(1\) செ.மீ  \(=\) \(10\) அலகுகள்.
 
2. கீழ்க்கண்ட வரைப்படத்தின் அளவுத்திட்டத்தைக் காண்க.
 
1259_14.png
 
தீர்வு:
 
கொடுக்கப்பட்ட வரைப்படத்தில் \(x\) -அச்சின் மதிப்பு \(50\) அலகாக அதிகரிக்கிறது.
 
ஆகவே, \(x\) - அச்சின் அளவுத்திட்டம் \(1\) செ.மீ \(=\) \(50\) அலகுகள்.
 
\(y\) - அச்சின் மதிப்பு \(50\) அலகாக அதிகரிக்கிறது.
 
எனவே, \(y\) - அச்சின் அளவுத்திட்டம் \(1\) செ.மீ  \(=\) \(50\) அலகுகள்.