PDF chapter test TRY NOW

வெட்டுக்கோடுகள் :  
 
இரண்டு கோடுகள் ஏதேனும் ஒரு இடத்தில் சந்திதால் அவை வெட்டுக்கோடுகள் எனப்படும். சந்திக்கும் புள்ளி வெட்டுப்புள்ளி ஆகும். 
 
9.png
 
மேற்கண்ட படத்தில் இருந்து \(AB\) மற்றும் \(CD\) வெட்டுக்கோடுகள். இங்கே வெட்டுக்கோடுகள் \(AB\) மற்றும் \(CD\) யின் வெட்டுப்புள்ளி ‘\(O\)’.
Example:
ஒரு கத்திரிக்கோலின்  இரு முனைகளுக்கு இடையே ஒரு புள்ளி இருக்கும் அதுவே வெட்டுப்புள்ளியாக செயலப்படுகிறது. இது வெட்டுக்கோடுகள் உதாரணம் ஆகும். இது போன்று ஏராளமான உதாரணங்கள் அன்றாட வாழ்க்கையில் உள்ளது.
 
இணை கோடுகள்:
 
இணை கோடுகள் ஒன்றை ஒன்று சந்திக்காமல் சென்று கொண்டே இருக்கும்.
 
3.svg
 
மேற்கண்ட படத்தில் இருந்து \(AB\) மற்றும் \(CD\) இணை கோடுகள் . \(AB\) மற்றும் \(CD\)ஒரு தளத்தில் உள்ள ஒன்றை ஒன்று வெட்டா கோடுகள் எனவே இவை இணை கோடுகள் ஆகும்.
Example:
ஒரு அறையில் உள்ள அலமாறிகள் இணை கோடுகளுக்கு உதாரணம் ஆகும்.இது போன்று ஏராளமான உதாரணங்கள் அன்றாட வாழ்க்கையில் உள்ளது.
11.png
 
ஒரு புள்ளி வழிக்கோடுகள் :
 
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகள் ஒரு புள்ளி வழிசென்றால் அவை ஒரு புள்ளி வழிக்கோடுக்கள் ஆகும். 
 
4.svg
 
மேற்கண்ட படத்தில் இருந்து \(AB\), \(CD\), \(PQ\) மற்றும் \(RS\) என்பன ஒரு புள்ளி வழிக்கோடுகள் ஏனெனில் \(O\) என்ற மையப்புள்ளியை கொண்டு உள்ளது. இதுவே, \(O\)என்பதே ஒரு வழிப்புள்ளியாகும்  .
Example:
ஒரு ஆரஞ்சு பழத்தின் ஒவ்வொரு சூலைகளும் \(P\) என்ற புள்ளி வழியே செல்வதால் இவை ஒரு புள்ளி வழிக்கோடுகள் ஆகும்.இது போன்று ஏராளமான உதாரணங்கள் அன்றாட வாழ்க்கையில் உள்ளது.
5.svg
 
செங்குத்து கோடுகள்:  
 
ஒன்றை ஒன்று சந்திக்கும் இரு கோடுகள் செங்குத்து கோடுகள் எனில் அவ்விரு கோடுகளின் கோணங்கள் , \(90°\) ஆகும்.
 
6.svg
 
மேற்கண்ட படத்தில் இருந்து \(AB\) மற்றும் \(CD\), என்பன செங்குத்து கோடுகள். இதனை \(AB Ʇ CD\) என எழுதலாம்.
Example:
சன்னலின் குறுக்கே உள்ள தடுப்புகள் \(90°\) கொண்டுள்ளது. இது போன்று ஏராளமான உதாரணங்கள் அன்றாட வாழ்க்கையில் உள்ளது.
7.svg