
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு நடுப்புள்ளி என்பது கோட்டுத்துண்டை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது என்பதை நாம் அறிவோம். இக்கோட்டுத்துண்டை 3 சம பாகங்களாகப் பிரித்தால், கிடைக்கும் புள்ளிகள் மூன்றுசமக் கூறிடும் புள்ளிகள் எனப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்ப்போம்
இங்கே, M மற்றும் N ஆகியன இக்கோட்டுத்துண்டின் இறுதிப்புள்ளிகள் என்க.
A மற்றும் B என்பது மூன்றுசமக் கூறிடும் புள்ளிகள்.
MAக்கு இடையே உள்ள தூரம் = ABக்கு இடையே உள்ள தூரம் = BNக்கு இடையே உள்ள தூரம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை கவனமாகப் பார்ப்போம்.
மூன்றுசமக் கூறிடும் புள்ளிகளைக் கண்டறிய, P மற்றும் Q மதிப்புகளைக் கண்டறிய வேண்டும்.
புள்ளி Pஇன் வரிசை ஜோடிகளைக் காண்க:
வரைபடத்தில் இருந்து, P ஆனது (a, b).
P இன் வரிசை ஜோடிகளைக் கண்டறிய, 'a' மற்றும் 'b' மதிப்புகள் தெரியவேண்டும்.
இதிலிருந்து 'a' என்பது x-ஆய அச்சு, OP'இன் தூரத்தைக் கருதுவோம்.
a = OP' = OA' + A'P'
a = x_1 + (\frac{x_2 - x_1}{3})
= \frac{3x_1 + x_2 - x_1}{3}
= \frac{2x_1 + x_2}{3}
எனவே, a = \frac{2x_1 + x_2}{3}.
இதிலிருந்து b என்பது y-ஆய அச்சு, PP'இன் தூரத்தைக் கருதுவோம்..
b = PP' = PA'' + A''P'
= (\frac{y_2 - y_1}{3}) + y_1
= \frac{y_2 - y_1 + 3y_1}{3}
= \frac{2y_1 + y_2}{3}
எனவே, P(a, b) இன் வரிசை ஜோடி (\frac{2x_1 + x_2}{3}, \frac{2y_1 + y_2}{3}).
இதைபோன்று, Q(c, d)இன் வரிசை ஜோடி (\frac{2x_2 + x_1}{3}, \frac{2y_2 + y_1}{3}).