PDF chapter test TRY NOW
தொன்மை அணுகுமுறை நிகழ்தகவில் உள்ள பழமையான அணுகுமுறை.
கீழ்க்கண்ட சூழ்நிலையில்.
\(7\) பெட்டிகள் பெயர்கள் முறையே \(1\) இல் இருந்து \(7\) வரை ஒரு பையில் வைக்கப்பட்டுள்ளது, சமவாய்ப்பு முறையில் பையில் இருந்து பெட்டி \(3\) எடுப்பதற்கான நிகழ்தகவு என்ன?
சமவாய்ப்பு முறை எனவே பையில் இருந்து ஒவ்வொரு பெட்டிகள் எடுப்பதற்கு சமவாய்ப்புகள் உள்ளன.
பொருள்களின் குழுக்களில் இருந்து ஒரே ஒரு பொருளை சமவாய்ப்பு முறையில் எடுத்தால், எல்லா பொருள்களையும் ஒரு முறை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது சமவாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
சம வாய்ப்புகள்:
பொருள்களின் குழுக்களில் இருந்து ஒரே ஒரு பொருளை சமவாய்ப்பு முறையில் எடுத்தால், எல்லா பொருள்களையும் ஒரு முறை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நிகழ்ச்சி \(E\), சாதகமான முடிவினை பெறுவதற்கான நிகழ்தகவு:
நிகழ்ச்சி \(E\) யின் நிகழ்தகவு \(P(E)\).
\(P(E) =\) \(\frac{\text{சாதகமான முடிவுகளின் எண்ணிக்கை}}{\text{கூறுவெளியில் உள்ள மொத்தஉறுப்புகளின் எண்ணிக்கை}}\)
\(P(E) =\) \(\frac{n(E)}{n(S)}\)
Example:
மேற்கண்ட சூழ்நிலையில் இருந்து:
நமக்கு தெரியும் \(7\) பெட்டிகள் பெயர்கள் முறையே \(1\) இல் இருந்து \(7\) வரை ஒரு பையில் வைக்கப்பட்டுள்ளது.
கூறுவெளி, \(S\) என்பது சாதகமான முடிவுகளின் எண்ணிக்கை.
எனவே, கூறுவெளி \(S =\) \(\{1, 2, 3, 4, 5, 6, 7\}\).
அதுவே, \(n(S) = 7\)
\(3\) என்ற பெட்டி கிடைப்பதற்கான நிகழ்தகவு:
\(3\) மட்டும் தேவை, சாதகமான முடிவு \(1\).
அதுவே, \(P(E) = \frac{1}{7}\)
சமவாய்ப்பு முறையில் ஏதேனும் \(1\) யை தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு என்ன?
\(1\) யை மட்டும் தேர்ந்தெடுத்தல். எனவே, \(n(E) = 1\)
எனவே, கூறுவெளி \(n(S) = 7\)
அதுவே, \(P(E) = \frac{1}{7}\)
எனவே, பொருள்களின் குழுக்களில் இருந்து ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தல் சமவாய்ப்பு ஆகும்.
Important!
1. நிகழ்தகவின் மதிப்பானது எப்பொழுதும் \(0\) மற்றும் \(1\) க்கு இடையில் இருக்கும்.
2. ஒரு சமவாய்ப்பு சோதனையின் முடிவுகள் சமம் ஆகும்.
3. \((V)\) என்பது நிகழ்ச்சி ஒன்றின் வெற்றிக்கான நிகழ்தகவு, எனில்:
அதே நிகழ்ச்சியின் தோல்விக்கான நிகழ்தகவு, \(n(F)\), \(= 1 - n(V)\)