PDF chapter test TRY NOW
இருதிணை
ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை(அல்திணை) என்றும் வழங்குவர்.
ஐம்பால்
பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால் – பகுப்பு, பிரிவு).
இஃது ஐந்து வகைப்படும்.
உயர் திணை
1. ஆண்பால்
2. பெண்பால்
3. பலர்பால்
என மூன்று பிரிவுகளை உடையது.
அஃறிணை
1. ஒன்றன் பால்
2. பலவின் பால்
என இரு பிரிவுகளை உடையது.
உயர்திணைக்குரிய பால் பகுப்புகள்
| வீரன், அண்ணன், மருதன் | – ஆண்பால் |
| மகள், அரசி, தலைவி | – பெண்பால் மக்கள் |
| பெண்கள், ஆடவர் | – பலர்பால் |
அஃறிணைக்குரிய பால் பகுப்புகள்
அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.
யானை
புறா
மலை
கடல்
காற்று
அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.
பசுக்கள்
மலைகள்
யானைகள்
மாடுகள்
ஆடுகள்
வீடுகள்
கடல்கள் .
