PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கொளல் வினா 
 
தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது. 
 
சான்று
  
“ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?” என்று நூலகரிடம் வினவுதல்
 
கொடை வினா
 
பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது.
 
சான்று
 
“என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?” என்று கொடுப்பதற்காக வினவுதல்.
 
ஏவல் வினா 
 
ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதல் பொருட்டு வினவுதல்
 
சான்று
 
“வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்.
 
சான்று
  
உரையாடலில் உள்ள வினாக்களைக் காண்போம்
 
அ) இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?
 
மின்விளக்கின் சொடுக்கி எந்தபக்கம் இருக்கிறது? – அறியாவினா
 
ஆ) சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறா, இல்லையா? – ஐயவினா