PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
(தமிழாசிரியரை மாணவியர் எழிலியும் குழலியும் வந்து சந்திக்கின்றனர்)
 
மாணவிகள்: வணக்கம் அம்மா.
 
தமிழாசிரியர் : வணக்கம். என்னம்மா?
 
மாணவிகள் : முத்தமிழ் மன்றக் கட்டுரைப் போட்டிக்கு அன்பின் "ஐந்திணை" என்ற தலைப்பில் கட்டுரை அனுப்பச் சொல்லி இருக்கிறார்கள். அது குறித்த அடிப்படையான செய்திகளைச் சொல்லுங்கள். மேலும் அது சார்ந்து நாங்கள் நூலகத்திற்குச் சென்று குறிப்புகளை எடுத்துக் கொள்கின்றோம்.
 
தமிழாசிரியர் : அப்படியா! பொருள் என்பது ஒழுக்கமுறை. நம் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்வியலை அகம் புறம் என வகுத்தார்கள். இதனைப் பொருள் இலக்கணம் விளக்குகிறது.
 
மாணவிகள் : மகிழ்ச்சியம்மா. அகப்பொருள் என்பது...
 
தமிழாசிரியர் : அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது அகத்திணை.
 
மாணவிகள்: அம்மா அகத்திணையில் வகைகள் உள்ளனவா?
 
தமிழாசிரியர் : குறிஞ்சி, முல்லை, மருதம். நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஏழும் அகத்திணைகள் ஆகும். இவற்றுள் முதல் ஐந்தும் அன்பின் ஐந்திணைகள்.
 
மாணவிகள்: சரிங்க அம்மா.