PDF chapter test TRY NOW

பெரும்பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்) :
 
1 கார்காலம் ஆவணி, புரட்டாசி
2 குளிர்காலம் ஐப்பசி, கார்த்திகை
3 முன்பனிக் காலம் மார்கழி, தை
4 பின்பனிக் காலம் மாசி, பங்குனி
5 இளவேனிற் காலம் சித்திரை, வைகாசி
6 முதுவேனிற் காலம் ஆனி, ஆடி
 
மாணவி I: சிறுபொழுதுகள் அம்மா..
 
தமிழாசிரியர் : ஒரு நாளின் ஆறு கூறுகளைச் சிறுபொழுது என்று பிரித்துள்ளனர்.
 
சிறுபொழுது (ஒரு நாளின் ஆறு கூறுகள்) :
 
1 காலை காலை 6 மணி முதல் 10 மணி வரை
2 நண்பகல் காலை 10 மணி முதல்  2 மணி வரை
3 எற்பாடு பிற்பகல் 2 மணி முதல் 6 வரை
4 மாலை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
5 யாமம் இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை 
6 வைகறை இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை