PDF chapter test TRY NOW

(முதுகலைத் தமிழ் இலக்கியம் பயிலும் கிள்ளிவளவனும், பத்தாம் வகுப்பு மாணவன சேரலாதனும் உரையாடுகின்றனர்).
 
கிள்ளிவளவன் : வா! சேரலாதா.. வா..
 
சேரலாதன் : வணக்கம் அண்ணா. எனக்கு நீங்கள் உதவ வேண்டும்.
 
கிள்ளிவளவன் : வணக்கம். நீ வந்தாய் என்றாலே தமிழ் இலக்கிய, இலக்கண உரையாடலுக்குத்தான். அப்புறம் என்ன உதவி என்கிறாய்!
 
சேரலாதன் : ஆமாண்ணே! புறப்பொருள் பற்றிய செய்திகள் அறிய வந்தேன்.
 
கிள்ளிவளவன் : அகப்பொருள் பற்றி வேண்டாமா?
 
சேரலாதன் : வேண்டாமண்ணே! சென்ற திங்களில் தமிழாசிரியர் அகப்பொருள் பற்றி அருமையாகக் கூறினார்.
 
கிள்ளிவளவன் : அகப்பொருள் பற்றி நீ புரிந்து கொண்டதைக் கூறு.
 
சேரலாதன் : அகப்பொருள் அன்பில் ஐந்திணை பற்றியது அண்ணே.
 
கிள்ளிவளவன் : மகிழ்ச்சி. புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை புறத்திணைகள், வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும்.