PDF chapter test TRY NOW
வெட்சிப்பூ
அழகுச்செடியாக வீட்டுத் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுகிற சிவந்த நிறமுடைய வெட்சிப்பூ. இட்லிப்பூ என்று அழைக்கப்படுகிறது.
கரந்தைப் பூ
சிறிய முட்டை வடிவில் கொத்தாகப் பூக்கக் கூடிய கரந்தை ஒரு சிறிய செடி. நறுமணம் மிக்க இது செம்மை நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு ஆகிய நிறங்களில் பூக்கின்றது. இதனைக் 'கொட்டைக் கரந்தை' என்றும் கூறுவர்.
காஞ்சிப் பூ
கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீலநிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள காஞ்சி என்பது ஒருவகைக் குறுமரம்.
வஞ்சிப் பூ
பளபளப்பான, மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்துள்ளது வஞ்சி.