PDF chapter test TRY NOW

அடுத்தது உழிஞைத் திணை தம்பி மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் அதனைச் சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை.
 
சேரலாதன் : இனி என்ன இருக்கு அண்ணே!
 
கிள்ளிவளவன் : தும்பைத் திணை பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச்சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை. போரிடுகின்ற அரசர்கள் இருவரும் தும்பைப் பூ மாலையையே குடியிருப்பார்கள். போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில் போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆதிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது.
 
சேரலாதன் : சிறப்பு மிகச் சிறப்பு! அடுத்து...
 
கிள்ளிவளவன் : வாகைத்திணை. போரிலே வெற்றிபெற்ற மன்னன் வாகைப் பூச்சூடி மகிழ்வது, வாகைத் திணை. வாகை என்றாலே வெற்றிதானே!.