PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅசை
எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது அசை.
அது நேரசை, நிரையசை என இரு வகைப்படும்.
குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும்.
(எ.கா.)
ந
நம்
நா
நாம்
இரண்டு குறில்எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும், அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும்.
(எ.கா.)
கட
கடல்
கடா
கடாம்
சீர்
ஓர்அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது சீர்.
சீர்களை
ஓரசைச்சீர்
ஈரசைச்சீர்
மூவசைச்சீர்
நாலசைச்சீர் என வகைப்படுத்துவர்.
தளை
சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர்.
முதல் சீரின் இறுதியிலும் வரும்சீரின் முதலிலும் உள்ள அசைகள் எவ்வகை அசைகள் என்பதன் அடிப்படையில், தளைகள் ஏழு வகைப்படும்.