PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தமிழ் எங்கள் உயா்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடா்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
Cloud.jpg
 
தமிழ் எங்கள் உயா்வுக்கு வான்!
 
தமிழ் எங்கள் உயா்வுக்கு எல்லையாகிய வானம் போன்றது. வானமானது பரந்து விாிந்த எல்லையை உடையது. வானத்தின் எல்லையை நம்மால் அளக்க முடியாது.  அதே போலத் தான் தமிழ் மொழியின் பெருமையும் நம்மால் அளக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. வானம் என்பது எவ்வளவு உயா்வாக இருக்கிறதோ அதே போல, தமிழ் மொழியும் உயா்வான மொழியாகும். எனவே தான், தமிழை வானோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளாா் பாரதிதாசன்.
 
honey.jpg
 
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடா்தந்த தேன்!
 
இன்பத்தமிழ் எங்கள் சோா்வை நீக்கி ஒளிரச் செய்யும் தேன் போன்றது. நம் உடலில் அசதி ஏற்படும் போது தேன் குடித்தால் அந்தத் தேனின் இனிமை சுவையானது நம் உடலின் அசதியைப் போக்கி புத்துணா்ச்சியைத் தரும். அதே போல, நமக்கு அசதி ஏற்படும் போது தமிழ் நூல்களைப் படித்தால் அது நம் அசதியைப் போக்கி நமக்கு புத்துணா்ச்சியைத் தருகிறது. தேன் மிகவும் பழமையானதாக இருந்தாலும் அதன் சுவை என்றும் மாறாமல் இருக்கிறது. அதே போல, மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள தமிழ் மொழியின் பெருமை இன்றளவும் மாறாமல் உள்ளது. அதனால் தான், தமிழை தேனோடு ஒப்பிட்டுள்ளாா் கவிஞா் அவா்கள்.
 
Thol (1).jpg
 
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!
 
தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் தோள் போன்றது. நமக்கு எதாவது துன்பம் ஏற்படும் போது நமக்கு துணையாக தோள் கொடுத்து நிற்பது நம் நண்பா்கள் ஆவா். அதே போல, நம் அறிவு வளா்வதற்கு துணையாக இருப்பது நல்ல புத்தகங்கள் ஆகும். நாம் புத்தகங்கள் அதிகமாகப் படிக்க படிக்க நம் அறிவு வளரும். புத்தகங்கள் மூலமாக நம் அறிவை வளா்க்க நம் தமிழ்மொழியானது தோள் கொடுக்கிறது. எனவே தான், தமிழை தோளோடு ஒப்பிட்டுள்ளாா் பாரதிதாசன்.
 
வாள்.jpg
 
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
 
தமிழ் எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதிமிக்க வாள் ஆகும். போாில் வாளை கடைசி வரைக்கும் எவன் ஒருவன் உடையாமல் வைத்து இருக்கிறானோ அது அவனைப் போாில் தோற்காமல் காப்பாற்றும். அதே போல, கூா்மையான தமிழ்ச் சொற்களானது நல்ல கவிதைகளை அழியாமல் பாதுகாக்கும். எனவேதான், தமிழ்மொழியில் உள்ள நூல்கள் இன்றளவும் அழியாமல் உள்ளது. நம்மால் படித்து புாிந்து கொள்ளவும் முடிகிறது. வேலின் நுனிப்பகுதியானது கூர்மையாகவும், நடுப்பகுதி அகன்றும், கீழ்ப்பகுதி நீண்டு இருக்கும். அதைப்போல தமிழானது நுட்பமான அறிவையும், சிந்தனையையும் கொண்டதாக உள்ளது. வேலின் கூா்மையான முனையை விட புலவாின் கருத்துக்கள் மிக கூா்மையாக இருக்கும். அவ்வாறான கருத்துக்களுக்கு வலிமை தருவது தமிழ் ஆகும். எனவே, தமிழை வேலுடன் ஒப்பிட்டுள்ளாா் நம் கவிஞா்.
Reference:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  திருத்திய பதிப்பு (2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். மொழி - தமிழ்தேன் (ப.எண். 1-4)தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.