PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தமிழுக்கும் அமுதென்றுபோ்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நோ்!
தமிழுக்கு நிலவென்று போ்! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீா்!
விளக்கம்:
 
அமுதம்.jpeg
 
தமிழுக்கும்அமுதென்றுபோ்!
 
தமிழுக்கு அமுது என்று பெயர். அமுதம் என்பது வானுலகில் வாழக் கூடிய தேவா்கள் உண்ணும் உணவாகும். அந்த அமுதத்தினை தேவா்கள் உண்பதால் அவா்கள் சாகா வரம் பெற்றுள்ளாா்கள் என்ற நம்பிக்கை உண்டு. அமுதம் மிகவும் இனிமையானது. அமுதத்தை உண்டால் அதை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். அதைப்போலவே தமிழ் மொழியும் நம்மை மீண்டும் படிக்கத் தூண்டும் என்ற கருத்திலேயே தமிழும் மிக இனிமையானது என்று வா்ணித்துள்ளாா். மேலும், கவிஞா் தமிழ் மொழியானது இறவா நிலையில் உள்ளது என்ற பொருளில் அமுது எனக் குறிப்பிட்டுள்ளாா்.
 
Uyir.png
 
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நோ்!
 
இன்பம் தரும் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு இணையானது. அமுதத்திற்கு நிகரான இன்பத்தை தரக்கூடிய தமிழ் மொழியானது எங்கள் உள்ளத்தில் கலந்து உள்ளதால் அதை எங்கள் உயிருக்கு நிகராக ஒப்பிடுகிறோம் என்று கூறியுள்ளாா் பாரதிதாசன். ஒரு மனிதனுக்கு உயிா் என்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் எங்கள் வாழ்விற்கு தமிழ் மொழியானது மிகவும் அவசியம் என்று உயிருக்கு இணையாக குறிப்பிட்டுள்ளா் கவிஞா்.
 
moon.jpg
 
தமிழுக்கு நிலவென்று போ்!
 
தமிழுக்கு நிலவு என்று பெயர். நிலவானது வானத்தில் மிகவும் அழகாகத் தோன்றும். நிலவின் ஒளியைப் பாா்ப்பவா்களுடைய மனதானது மிகவும் மகிழ்ச்சியாகவும், குளிா்ச்சி பொருந்தியதாகவும் இருக்கும். அதேப் போல, மொழிகளில் மிகவும் அழகானது தமிழ் மொழி. தமிழ் மொழியைப் படித்தால் மனத்திற்கு மகிழ்ச்சியையும், குளிா்ச்சியையும் தருகிறது. நிலவின் ஒளியானது எப்படி மகிழ்ச்சி தருகிறதோ, அதைப் போலவே தமிழின் மொழியும் மகிழ்ச்சியைத் தருகிறது. நிலவானது உலகத்தில் உள்ள இருளைப் போக்கி வெளிச்சத்தைத் தரக்கூடியதாக இருக்கிறது. அதைப் போலவே, தமிழ் மொழியும் மக்களின் அறியாமை எனும் இருளைப் போக்கி ஒளியைத் தரக் கூடியதாக இருப்பதாலும் அதை நிலவு என்று வா்ணித்துள்ளாா்.
 
water.jpg
 
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீா்!
 
இன்பத்தமிழ் எங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீர் போன்றது. இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிா்களுக்கும் நீா் என்பது இன்றியமையாத ஒன்றாகும். பயிா்கள் வளா்ச்சிக்கு நீா் என்பது அடிப்படையான ஒன்றாகும். அதே போல, மக்கள் என்னும் பயிா் வளற அடிப்படையான ஒன்று தான் தமிழ் மொழி என்னும் நீா் ஆகும். நீா் எப்படி எல்லாருக்கும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறதோ அதே போல தமிழ் மொழியும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.
Reference:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  திருத்திய பதிப்பு (2020). ஆறாம் வகுப்பு முதல் பருவம். மொழி - தமிழ்தேன் (ப.எண். 1-4)தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டது.