PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
     தமிழுக்கு முத்தமிழ் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இயல்தமிழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் ; இசைத்தமிழ் உள்ளத்தை மகிழ்விக்கும்; நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும்.
     தமிழில் காலந்தோறும் பல வகையான இலக்கியவடிவங்கள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள், போன்றன தமிழ்க் கவிதை வடிவங்கள். கட்டுரை, புதினம், சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள்.
    தற்போது அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என்று மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது.
  • ஒரு மொழி வளம் பெறுவதும் வளமை பெறுவதும் அம்மொழி பேசும் மக்களுடைய மன வளத்தை பொருத்ததாகும்.
  • உலகில் பல மொழிகள் தோன்றி அழிந்து விட்டது. சில மொழிகளே இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
  • அவ்வகையில் தமிழ்மொழியானது நடைமுறையில் மட்டுமின்றி வளா்ச்சியும் பெற்றுள்ளது எனலாம்.
  • அதற்கு காரணம் என்னவென்றால் உலகின் பிற பகுதி மக்கள் நிலையான வாழ்வின்றி அமைதியற்று வாழ்ந்த காலத்தில் தமிழா்கள் செம்மாந்த வாழ்க்கையினை வாழ்ந்துள்ளனா்.
  • அவா்கள் சமுதாய ஒருமைப்பாட்டினையும் வானிகச் சிறப்பையும், இலக்கிய வளத்தையும் பெற்று வாழ்ந்தனா்.
  • எனவே தான், தமிழா்களின் மொழியாகிய தமிழும் நிலைபெற்று வளா்ந்துள்ளது என்பதே உண்மையாகும்.
  • மாற்றம் ஒன்றே மாறாதது.மாற்றத்தை விரும்புகிற அனைத்தும் நிலைபெற்று வாழும் என்பதற்கேற்ப தமிழ் மொழியானது ஏற்றும் பெற்றே வாழும்.
  • காலச்சூழல்களுக்கு ஏற்ப தமிழ்மொழியானது உயிா்ப்பையும், உணா்வினையும் பெற்று வளா்ந்து வருகின்றது.
  • முத்தமிழ் என்ற நிலைமாறி அறிவியல் தமிழாகி அதனையும் தாண்டி இணையத்தமிழாகி வளா்ந்து தன்னொளி பரப்பி வருவது தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இருபதாம் நூற்றாண்டில் நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் போன்றவை தமிழை வளா்த்தது.
  • இன்று இணையதளம், மின்னிதழ்கள், முகநூல், வலைப்பூக்கள், சமூகவலைதளம் போன்ற ஊடகங்கள் வழியாக தமிழ் உலகளாவிய மொழியாகப் பல துறைகளிலும் பவி தீந்தமிழாக வளா்ந்து வருகின்றது.
  • இணையதளங்கள் மட்டுமின்றி இணைய இதழ்களும் தமிழை வளா்த்துள்ளது எனலாம்.
  • அவற்றில் கீற்று, தமிழோவியம், தமிழ் கூடல், மரத்தடி, தமிழம் நெட், முத்துக்கமலம் போன்ற மின்னிதழ்கள் தமிரை வளா்ப்பதில் பெரும்பங்காற்று வருகிறது.
  • இவ்விதழ்கள் கதை, சிறுகதை, கவிதை, இலக்கியம், திறனாய்வு எனப் பல துறைகளில் தமிழை வளா்த்து வருகிறது.
  • எந்தவொரு மொழி பிறமொழிச் சொற்களின் உதவியின்றி மக்களின் வாழ்க்கையோடு தொடா்புடையக் கருத்துகளைப் பாிமாறிக் கொள்ளத் துணைபுாிகின்றதோ அம்மொழியே சிறந்த மொழியாகும் என்கிறாா் பு. இந்திராகாந்தி.
  • இக்கருத்திற்கு ஏற்றவாறு காலந்தோறும் பலதுறைகளிலும் பழைமைக்கும் பழைமையாய் புதுமைக்கும் புதுமையாய் வளா்ந்து வரும் மொழி தமிழ்மொழி என்பதை நினைத்து பெருமைகொள்வோம்.