PUMPA - THE SMART LEARNING APP

Helps you to prepare for any school test or exam

Download now on Google Play
 • தமிழ் நிலப்பரப்பில் நிலத்தினை ஐவகையாகப் பிரிப்பர்.
 • குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பகுக்கப்பட்டுள்ளது.
 • இதில் நெய்தல் நிலம் கடலும் கடல்சார்ந்த இடமும் என்கிறது தொல்காப்பியம்.
 • இந்நிலத்தின் தொழில் மீன்பிடித்தல். மக்கள் பரதவர், சேர்ப்பர், மீனவர், பரத்தியர் என்று அழைக்கப்படுவர்.
 • மழைதரும் கடவுளான வருண பகவானை வழிபடுகின்றனர்.
 • இவர்களது தொழில் மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகும்.
 • மீன்கள் என்பது நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள விலங்கினம்.
 • மீனின் உடலானது தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டது.
 • இம்மீன்கள் இணைத் துடுப்புகளாலும், நடு முதுகுத் துடுப்புகளாலும் நீந்துகின்றன.
 • நெய்தல் நிலத்தினை மையமாகக் கொண்டு தமிழ்ப் புதினங்கள் வெளிவந்துள்ளன.
 • இராஜம்கிருஷ்ணன் எழுதிய அலைவாய்க்கரையினிலே, வண்ண நிலவன் எழுதிய கடல்புரத்தில், ஜோ.டி.குருஸ் எழுதிய  ஆழிசூழ் உலகு, கொற்கை, மீரான் எழுதிய ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், சு.தமிழ்செல்வி எழுதிய அளம் போன்ற புதினங்கள் தமிழில் வெளிவந்துள்ளன.
 • எர்னஸ்ட் ஹெமிங்வேவின் கிழவனும் கடலும் என்னும் புதினம் இருத்தலியலை வெளிப்படுத்துகிறது.
 • முதன்மையான கதைமாந்தர் சாண்டியாகோ. துணைமை கதைமாந்தர் சிறுவன் மனோலின்.
 • அளவான கதைமாந்தரைக் கொண்டு புனைவாக்கியுள்ளது இப்புதினத்தின் சிறப்பம்சம் என்று கூறலாம்.
 • கடல்வாழ் மக்களின் போராட்ட வாழ்வினைக் கதை மையமாக்கப்படுள்ளது.சாண்டியாகோ மீன்பிடி தொழில் செய்யும் வயோதிகர்.
 • ஒரு மனிதனின் மூலதனம் உழைப்பு. உழைப்பால் மட்டுமே உயர அல்லது வாழ முடியும்.
 • மூடநம்பிக்கையான அதிஷ்டம் மனிதனுக்கு ஒருபோதும் உதவாது. இதன் மூலம் வாழ்வை நகர்த்த இயலாது.
 • மூலதனமான உழைப்பை மிகக் கச்சிதமாகப் பொருத்திப் புனையப்பட்ட படைப்பு கிழவனும் கடலும்.
 • மூர்க்கத்தனமான சுறா மீனைத் தனது முதிர்ச்சியான மன வலிமையினால் போராடிக் கரை சேர்த்தலில் சாண்டியாகோவின் விடாமுயற்சியைக் காணமுடிகிறது.
 • வேண்டாம், இல்லை, கிடையாது, முடியாது, தோல்வி, தடை, தடங்கல், முக்கல்முனங்கல், பார்க்கலாம் என்பதான இயலாமைக் குறித்தச் சொல்லாடலுக்கு மாற்றான மனோபாவத்தினைக் கட்டமைத்துள்ளார்.
 • சிறிய பறவையினங்கள், சுறாக்கள் போன்றவைக் குறுக்கீடுகள், இடையூறுகள், இடையீடுகள் இருந்தாலும் தளாராத மனப்போக்குடன் தூண்டில், படகைத் துணை ஆயுதமாகவும் உடல் சோர்வு, வயிற்றுப் பசி, கண் அயற்சி, ஏனைவரின் ஏளனப் பார்வையும் பேச்சையும் புறந்தள்ளி வாகை சூடியதில் வாழ்வியலின் போராட்டக் குணங்கள் வெளிச்சமிடுகின்றன.
 • மனதில் நிற்கும் கதைமந்தர்களாக நாமே முதியவராக, பாலகராக,  கடலாக, பறவையாக,  மீனாக, சுறாக்களாக என்றெல்லாம் கூடுவிட்டு கூடுபாயும் தன்மையில் புதினத்தின் கதைமாந்தர்களை நம்மில் புகுத்திக் கொண்டு வாசிக்கலாம்.
 • வெறுமனே இயலாமையில் ஏற்பட்ட சீற்றத்தை பிரதிபலிக்காமல் மனிதனின் இருத்தலை உறுதிசெய்யத் தவறவில்லை.
 • ஒவ்வொருவரின் தேவையைக் கவனப்படுத்திச் செல்கின்றது புதினம்.
  மனிதனின் பசிக்கு மீன், சுறாக்களின் பசிக்கு மீன் இருவரது இலக்கும் ஒன்றே.
 • மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம் மிக யதார்த்தமாகப் புனையப்பட்டுள்ளது.
 • வியப்பு என்னவென்றால் வெற்றிக் களிப்பில் கொண்டாடாமல் மனநிறைவோடு அமைதியாக உறங்குவது அனுபவ முதிர்ச்சியைக் காட்டுகிறது.
 • தனது முதுமையை இயலாமையைப் பகடி செய்தவர்களுக்கு எதிராகச் இச்செயலைக் கருதாமல் தமது பணி என்பதான போக்கில் தொடர்ந்து அதற்கு எதிர்வினையாற்றுவது என்பது கதைமாந்தரின் ஆளுமைத் திறனைக் கவனப்படுத்திச் செல்கிறார் ஹெமிங்வே.
 • தமது ஏற்பட்ட பாதகமான அம்சத்தையும் சாதகமான அம்சமாக மாற்றும் உத்திமுறையில் சாண்டியாகோ புனையப்பட்டுள்ளார்.
 • போராட்டக் களத்தில் எதிரி எவருமில்லை.
 • போராட்டம் நிறைந்த கதைக் களத் தெரிவு, அளவான கதைமாந்தர்கள், எளிய மொழிநடை, எவரும் புரியும் வகையில் சுருங்கச் சொல்லல், காட்சி அமைப்பில் நேர்த்தி, வாசிப்பிற்குக் கேற்ப சுவைபடச் சொல்லல், புரிதலுடனான எளிதான கதைப் பின்னல், கதையில் விறுவிறுப்பு, திருப்புமுனை என்பதான வாசகர்கள் கொண்டாடும் வகையில் கதையமைப்பைக் கச்சிதமாகப் புனைந்துள்ளார்.
 • மொழி பெயர்ப்புப் படைப்பை வாசிக்கிறோம் என்பதான எண்ணமே இல்லாத வகையில் வாசகருக்கான படைப்பாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
 • தமிழ்ப் படைப்பாளிகள் சித்திரிக்கும் கடல்வாழ் குறித்தப் படைப்புகளில் பரதவர்களின் இன வரையியல் சார் நிகழ்வுகளாகக் கதைகள் நகர்த்தப்படுகின்றன. இக்கதைகளில் கதை மாந்தர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருப்பர்.
 • ஹெமிங்வே வாசகர் மனதில் பதிய வைக்கும் கதைமாந்தரையும் கதை நிகழ்வுகளையும் கதைப் போக்கையும் வாசகருக்கு அளித்திருப்பது தனித்துவத்திலும் தனித்துவம்.