PDF chapter test TRY NOW

             மொழி என்பது கருத்தை வெளிப்படுத்தும் கருவி. இக்கருத்தைக் கடந்து, மொழி ஓர் இனத்தின் அடையாளமாகவும், பண்பாடாகவும் பரிணமித்து இன்று முழுகவனம் பெறுகிறது.
             அவ்வாறு, கவனம் பெறும் மொழிகளில் தமிழ்மொழி முதன்மையாகவும் பல சிறப்புக் கூறுகளோடு செம்மொழியாகவும் திகழ்கிறது.
            மொழி சொற்களால் கட்டப்பட்டது. சொல் எழுத்துகளால் கட்டப்பட்டது. ஆக, சொல்லுக்கு அடிப்படை ‘எழுத்து’ என்றாகிறது.
‘அ’ என்பது தனித்த ஓர் எழுத்து.
தனித்த பல எழுத்துகள் சேர்ந்ததுதான் ஒரு சொல்  - அ + ற + ம் = ‘அறம்’
சொல் என்பதைக் குறிக்கும் பிற சொற்கள் - வார்த்தை, கிளவி, பதம், மொழி).
  • எழுத்து என்பது மொழி உருவாகக் காரணமான ஒலிக்கூட்டம். இவ்வெழுத்து இரு வகைப்படும்.
                    1. ஒலி வடிவம் - ஒலிக்கப்படுவது (ஒலித்தல்).
                    2. வரி வடிவம் – எழுதப்படுவது (எழுதுதல்). 
  • தமிழ்மொழியின் ஒலி  வடிவம் நான்கு வகைப்படும்.
1. உயிர் எழுத்துகள்–     12(அ முதல் ஔ வரை)
2. மெய் எழுத்துகள்–     18   (க் முதல் ன் வரை)
3. உயிர்மெய் எழுத்துகள்      –   216(க முதல் னௌ வரை)
4. ஆய்தம் –       1 
                               மொத்தம்
    _____
     247
    _____