
PUMPA - SMART LEARNING
மதிப்பெண்கள் எடுப்பது கடினமா? எங்கள் AI enabled learning system மூலம் நீங்கள் முதலிடம் பெற பயிற்சியளிக்க முடியும்!
டவுன்லோடு செய்யுங்கள்மணம் - மனம்
மேலே உள்ள இரண்டு சொற்களையும் கவனியுங்கள்.
உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன.
ஆனால் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு.
இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.

ண, ன, ந ல, ழ, ள ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.
ண, ன, ந - எழுத்துகள்

ண - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.
ன - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.
ந - நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.
(ட், ண்) (த், ந்) (ற், ன்) ஆகியவை இன எழுத்துகள்.
இந்த இன எழுத்துகளைக் கொண்டு டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும்,
தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும்,
றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகின்றன.
ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம் எழுதப்படுமானால் பொருள் மாறுபடும் என்பதை உணர்க.
(எ. கா.)
வாணம் – வெடி
பணி - வேலை
வானம் - ஆகாயம்
பனி – குளிர்ச்சி.