PUMPA - THE SMART LEARNING APP

AI system creates personalised training plan based on your mistakes

Download now on Google Play
உழவர் செய்யும் தொழில் உழுதல், தையல்காரர் செய்யும் தொழில் தைத்தல்
 
இத்தொடர்களில் உழுதல், தைத்தல் என்பன செயல்களின் பெயர்களாக அமைகின்றன.
 
இவ்வாறு ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும்.
 
தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது.
 
படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.
 
எ.கா. படித்தல், ஆடல்,  நடிப்பு, எழுதுதல், பொறுத்தல்
 
தொழிற்பெயரை, விகுதி பெற்ற தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் என வகைப்படுத்துவர்.
விகுதி பெற்ற தொழிற்பெயர்
 
நடத்தல், உண்ணல், வாழ்வு, வாழ்க்கை ஆகிய பெயர்களைக் கவனியுங்கள்.
 
இவற்றில் நட, உண், வாழ் ஆகிய வினைப்பகுதிகள் தல், அல், வு, கை ஆகிய விகுதிகளோடு சேர்ந்து தொழிற்பெயர்களாக அமைகின்றன.
 
இவ்வாறு வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.
 
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை போன்றவை தொழிற்பெயர் விகுதிகளாக வரும்.
 
எ.கா.
 
தருதல் - தல்
  
கூறல் - அல்
  
மறைவு - வு
  
ஆட்டம் - அம்
  
விலை - ஐ
  
மறதி - தி
  
உணர்ச்சி - சி
  
வருகை - கை
  
செய்யாமை - மை
  
பார்வை - வை
  
போக்கு - கு
  
கல்வி - வி
  
நட்பு - பு