PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உடல் + ஓம்பல் = உடலோம்பல்
 
(இங்கு ல் + ஓ இணைந்து லோ என்னும் உயிர்மெய் எழுத்து ஆயிற்று. புதிய எழுத்து எதுவும் தோன்றவோ வேறு எழுத்தாகத் திரியவோ மறையவோ இல்லை.) இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின், அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
 
விகாரப் புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.
 
நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது தோன்றல் விகாரம் ஆகும்.
 
(எ.கா.) தமிழ் + தாய் = தமிழ்த்தாய்
 
நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது திரிதல் விகாரம் ஆகும்.
 
(எ,கா.) வில் + கொடி = விற்கொடி
 
நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது கெடுதல் விகாரம் ஆகும்.
 
(எ.கா.) மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி
 
இரண்டு சொற்கள் இணையும்போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வதும் உண்டு.
 
(எ.கா.) நாடகம் + கலை = நாடகக்கலை
 
இங்குக் கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்தது. தோன்றல் விகாரத்தின்படி க் என்னும் மெய்யெழுத்து தோன்றியது.