PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மூன்றாம்வேற்றுமை
 
ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகிய நான்கும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள்.
 
இதில் ஆல், ஆன் ஆகியவை கருவிப்பொருள், கருத்தாப் பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்.
 
கருவிப் பொருள்
 
முதற்கருவி, துணைக்கருவி என இரு வகைப்படும்.
 
முதற்கருவி – கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது – மரத்தால் சிலை செய்தான்
 
துணைக்கருவி – ஒன்றைச் செய்வதற்கு துணையாக இருப்பது – உளியால் சிலை செய்தான்
 
கருத்தாப்பொருள்
 
ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இரு வகைப்படும்.
 
ஏவுதல் கருத்தா
 
பிறரை செய்ய வைப்பது
 
எ.கா – கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது
 
இயற்றுதல் கருத்தா
 
தானே செய்வது
 
எ.கா  சேக்கிழாரால் பெரியபுராணம் இயற்றப்பட்டது
 
ஆன் என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்.
 
எ.கா.
  
புறந்தூய்மை நீரான் அமையும்
 
ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
 
எ.கா.
  
தாயொடு குழந்தை சென்றது.
  
அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.
 
நான்காம்  வேற்றுமை
 
நான்காம் வேற்றுமை உருபு – கு
 
கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.
 
கொடை
  
 முல்லைக்குத் தேர் கொடுத்தான்
 
பகை
  
புகை மனிதனுக்குப் பகை
 
நட்பு
  
 கபிலருக்கு நண்பர் பரணர்
 
தகுதி
  
 கவிதைக்கு அழகு கற்பனை
 
அதுவாதல்
  
தயிருக்குப் பால் வாங்கினான்
 
பொருட்டு
  
தமிழ்வளர்ச்சிக்கு பாடுபட்டார்
 
முறை
  
செங்குட்டுவனுக்கு தம்பி இளங்கோ
 
எல்லை
  
தமிழ்நாட்டுக்குக் கிழக்கு வங்கக்கடல்
 
நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக ஆக என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு.
 
எ.கா – கூலிக்காக வேலை