Theory:

விடை
 
வினாக்களுக்குத் தக்கவாறு கூறப்படும் விடை
 
எட்டு  வகைப்படும்
  
1) சுட்டு  விடை
 
2) மறை  விடை
 
3) நேர்  விடை
 
4) ஏவல்  விடை
 
5) வினா எதிர் வினாதல் விடை
 
6) உற்றது உரைத்தல் விடை
 
7) உறுவது கூறல் விடை
 
8) இனமொழி  விடை 
 
சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
 நிலவிய ஐந்தும் பொருண்மையின் நேர்ப - நன்னூல் - 386
 
சுட்டு விடை
 
சுட்டிக் கூறும் விடை
 
“கடைத்தெரு எங்கு உள்ளது?” என்ற வினாவிற்கு ‘வலப்பக்கத்தில் உள்ளது’ எனக் கூறல்
 
மறை விடை
 
மறுத்துக் கூறும் விடை
 
“கடைக்கு போவாயா?” என்ற கேள்விக்குப் ‘போக மாட்டேன்’ என மறுத்துக் கூறல்
 
நேர் விடை
 
உடன்பட்டுக் கூறும் விடை
 
“கடைக்கு போவாயா?” என்ற கேள்விக்குப் ‘போவேன்’ என்று உடன்பட்டுக் கூறல்.