Theory:

உரையாடலில்  இடம்பெற்றுள்ள வினா விடை வகைகளைக் காண்போம்.
 
பாமகள் : வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?
 
- அறியா  வினா
 
ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
 
- உற்றது உரைத்தல் விடை
 
பாமகள் : அப்படியா! என்ன தலைப்பு? - அறியா  வினா
 
ஆதிரை : கல்வியில் சிறக்கும் தமிழர்! - நேர்  விடை.
 
நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ? - ஐய  வினா
 
பாமகள் : ஏன் வராமல்? - வினா எதிர் வினாதல் விடை
 
 
வினா விடை வகைகளைக் காண்போம்
 
1.“காமராசர் நகர் எங்கே இருக்கிறது?”- அறியா வினா
 
2. “இந்த வழியாகச் செல்லுங்கள்”- சுட்டு  விடை
 
3. இதோ… இருக்கிறதே! – சுட்டு  விடை
 
4. “எனக்கு எழுதித் தருகிறாயா?” -ஏவல்  வினா
 
5. “எனக்கு யார் எழுதித் தருவார்கள்- ஏவல்  விடை