PUMPA - THE SMART LEARNING APP
Take a 10 minutes test to understand your learning levels and get personalised training plan!
Download now on Google PlayTheory:
சுசீலா, அவளுடைய தோழி கமீலாவின் வீட்டுக்குப் போனாள்.
கமீலாவும் சுல்லதானும் தொலைகாட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சுல்தானைவிடக் கமீலா இரண்டு ஆண்டுகள் பெரியவள்.
ஆனால் உருவத்தில் சுல்தான்தான் அண்ணனைப் போல இருப்பான்.
சுசீலாவைக் கண்டவுடன் கமீலா மகிழ்ச்சியடைந்தாள்.
மேற்கண்ட பகுதியில் இடைச் சொற்களைஇனம் காண முடிகிறதா?
இன், கு, உடைய, உம், ஐ, விட, கள், ஆனால், தான், போல, உடன் போன்றவை இடைச் சொற்கள்.
பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள் ஆகியவற்றைப்போல இடைசொல்தமிழில் மிகுதியாக இல்லை.
ஆயினும், இடைச் சொற்களே மொழிப் பயன்பாட்டை முழுமையாக்குகின்றன.
இடைச் சொற்கள், பெயரையும் , வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன;
தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்கிறார் தொல்காப்பியர்.
இடைச்சொல் பலவகையாக அமையும்.
இடைச்சொற்களின் வகைகள்
வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண்
பன்மை விகுதிகள் கள், மார்
திணை, பால் விகுதிகள் ஏன், ஓம், ஆய், ஈர்(கள்), ஆன், ஆள், ஆர், ஆர்கள், து, அ
கால இடைநிலைகள் கிறு, கின்று,…
பெயரெச்ச, வினையெச்ச விகுதிகள் அ, உ, இ, மல்,…
எதிர்மறை இடைநிலைகள் ஆ, அல், இல்
தொழிற்பெயர் விகுதிகள் தல், அம், மை
வியங்கோள் விகுதிகள் க, இய
சாரியைகள் அத்து, அற்று, அம்,…
உவம உருபுகள் போல, மாதிரி
இணைப்பிடைச் சொற்கள் உம், அல்லது, இல்லையென்றால், ஆனால், ஓ, ஆகவே, ஆயினும், எனினும்,…
தத்தம் பொருள் உணர்த்தும் இடைச் சொற்கள் - உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம்
சொல்லுருபுகள் மூலம், கொண்டு, இருந்து, பற்றி, வரை
வினா உருபுகள் ஆ, ஓ
இவற்றுள் உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம் ஆகிய இடைச்சொற்கள் தற்காலத் தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன.