PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
- தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவை உற்பத்தி செய்கின்றது.
 
- வெளிப்புற சூழலிலிருந்து உள் கட்டமைப்பைப் பாதுகாக்கின்றது.
 
உணவுப் பொருட்கள் மற்றும் நீரைத் தாவரங்கள் உடல் முழுவதும் கொண்டு செல்கின்றது.
 
- தீவிர நிலைமைகளின் போது நீர் இழப்பைத் தடுக்கின்றது.
 
- தாவரப் பாகங்கள் சேதமடைவதைத் தடுக்கின்றது.
 
- திடமாகவும் வலுவாகவும் தன்னை பாதுகாக்கின்றது.
 
மேலே கூறப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும் செய்ய, தாவரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒன்றாக இணைந்து செயல்படப்  பல திசுக்கள் தேவை. திசுக்கள் மற்றும் அவற்றின் வகைகள் குறித்து இந்த கோட்பாட்டில் காண்போம்.
ஒரே மாதிரியான அல்லது வேறுபட்ட தோற்றம் மற்றும் அமைப்பைக்  கொண்டு ஒரு குறிப்பிட்ட பணிகளைச் செய்யும் செல்களின் தொகுப்பே  திசுவாகும்.
திசுவமைப்பியல் என்பது நுண்ணோக்கியின் கீழ் திசுக்கள் மற்றும் செல்கள் பற்றிப் படித்தறியும் ஓர் பிரிவாகும்.
 
பொதுவாகத் தாவரங்கள் பல வகை திசுக்களால் ஆனது. பகுப்படையும் திறனைப் பொறுத்து  திசுக்கள் இரண்டு முக்கிய பிரிவுகளாக வகைப் படுத்த பட்டுள்ளன. அவையாவன
  1. ஆக்குத் திசுக்கள்
  2. நிலைத்தத் திசுக்கள்
\(9\) ம் வகுப்பில்  "திசுக்களின் அமைப்பு" என்ற பாடத்தில் ஆக்குத் திசுக்கள் மற்றும் நிலைத்தத் திசுக்கள் குறித்து நீங்கள் ஏற்கெனவே படித்திருப்பீர்கள்.
 
திசுத் தொகுப்புகள்:
 
\(1875\)- ம் ஆண்டு சாக்ஸ் என்பவர் தாவரங்களில் மூன்று வகையான திசு அமைப்புகளை அவற்றின் அமைப்பு மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் வகைப்படுத்தினார். அவையாவன,
  1. தோல் திசுத்தொகுப்பு  அல்லது புறத்தோல் திசுத்தொகுப்பு
  2. அடிப்படை அல்லது தளத்திசுத்  தொகுப்பு
  3. வாஸ்குலார்  அல்லது கடத்தும் திசுத்தொகுப்பு
தோல் அல்லது புறத்தோல் திசுத்தொகுப்பு:
 
புறத்தோல்,புறத்தோல் துளை மற்றும் புறத்தோல் வளரிகள் ஆகியவை புறத்தோல் திசுத்தொகுப்பில் காணப்படுகின்றன.
 
தாவரங்களின் வெளிப்புற அடுக்கு புறத்தோல் எனப்படும். இவ்வகை திசுத்தொகுப்பில் பல சிறிய துளைகள் காணப்படுவதால்  இவை புறத்தோல் துளை அல்லது ஸ்டோமேட்டா என்று அழைக்கப் படுகிறது. மேலும் இலை மற்றும் தண்டின் வெளிப்புற சுவர் கியூட்டிக்கிள் என்னும் மெழுகுப் படலாத்தாலனது. இந்த கியூட்டிக்கிள் நீராவிப் போக்கினை தடுக்க உதவுகிறது. மேலும், புறத்தோலில் டிரைகோம்கள் எனப்படும் பல செல்களாலான வளரிகள் மற்றும் வேர்த் தூவிகளும்  காணப்படுகின்றன.
 
26183785300_598363ec36_k.jpg
டிரைகோம்கள்
 
தோல் திசுத்தொகுப்பின் பணிகள்:
  • உட்புற திசுக்களைப் புறத்தோல் பாதுகாக்கின்றன.
  • நீராவிப் போக்கு நடைபெற புறத்தோல் துளைகள் உதவுகின்றன.
  • நீர் மற்றும் கனிமங்களை உறிஞ்ச வேர்த் தூவிகள் பயன் படுகின்றன.
அடிப்படை அல்லது தளத்திசுத்  தொகுப்பு:
 
புறத்தோல் திசுத்தொகுப்பு மற்றும் வாஸ்குலார் திசுத்தொகுப்புகளிலுள்ள  திசுக்கள் தவிர அனைத்து திசுக்களும் இவ்வகைத் திசுத் தொகுப்பிலடங்கும். 
 
தளத்திசுத் தொகுப்பில் புறணி, அகத்தோல், பெரிசைக்கிள் மற்றும் பித் ஆகியவை உள்ளன.
திசுத் தொகுப்பு மற்றும் அவற்றின் பணிகள்:
1. திசுத்தொகுப்பு: தோல் திசுத்தொகுப்பு
 
திசுக்கள்: புறத்தோல் மற்றும் பெரி டெர்ம்
 
பணிகள்: பாதுகாப்பு மற்றும் நீர் இழப்பைத் தடுப்பது
 
2. திசுத்தொகுப்பு: அடிப்படை திசுத்தொகுப்பு
 
திசுக்கள்: பாரன்கைமா , குளோரன்கைமா, கோலன்கைமா மற்றும் ஸ்கிளிரன்கைமா
 
பணிகள்:  ஒளிச் சேர்க்கை, உணவு சேமித்தல் ,பாதுகாப்பு உறுதித்தன்மை
 
3. திசுத்தொகுப்பு:வாஸ்குலார் திசுத்தொகுப்பு
 
திசுக்கள்: சைலம் மற்றும் புளோயம்
 
பணிகள்: நீர் மற்றும் கனிமங்களைக் கடத்துதல்  மற்றும் உணவுப் பொருள்களைக் கடத்துதல்