PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தாவர உள்ளமைப்பியல் என்பது தாவரத்தின் பகுதிகளை வெட்டி அவற்றின் உட்புற அமைப்பை நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தலைக் குறிக்கும் ஓர் பகுதியாகும். உயிரினங்கள் மிகச்  சிறிய அலகுகளால் ஆனவை. அவ்வடிப்படை அலகுகள் செல்கள் எனப்படும் . அவை நுண்ணியவை, மேலும் உயிரினங்களில் உடலில் ஏற்படும் அனைத்து அத்தியாவசிய செயல்களுக்கும், செயல்பாடுகளுக்கும் இவை மூலக் காரணமாக விளங்குகின்றன என்பதை நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம்.
தாவரத்தின் உட்புற அமைப்பைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவே தாவர உள்ளமைப்பியல் (plant Anatomy) எனப்படும். (Anatomy : Ana = as under, tamnein = to cut)
நெகமய்யா க்ரூ, என்பவர் \(26\) செப்டம்பர் \(1641\)-இல் பிறந்தார், இவர் ஒரு ஆங்கில தாவர உடற்கூறியல் நிபுணர் ஆவார். தாவரங்களின் உள்ளமைப்பியல் பற்றிய தொகுப்பை முதன் முதலில் வெளியிட்டவரும் இவரே, எனவே இவர் "தாவர உள்ளமைப்பியலின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.
 
Nehemiah_Grew.png
நெகமய்யா க்ரூ
 
ஒரு செல் தாவரங்களில் ஒரே ஒரு  செல் மட்டுமே காணப்படுவதால் அவை எளிமையான உடலமைப்பைப் பெற்றுள்ளன. மேலும் அவ்வுயிரினங்களின் வளர்ச்சி, உணவு தயாரித்தல்வளர்சிதை மாற்றம் மற்றும் இனப்பெருக்கம் ஆகிய அனைத்து வாழ்க்கை செயல்முறைகளையும், அந்த ஒரு தனிச் செல்லே செய்கிறது.

முற்போக்கு பரிணாம வளர்ச்சியின் காரணமாக ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரணுக்களால் ஆன உயிரினங்கள் உருவாயின, அவை பல செல் உயிரினங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேம்பாடு அடைந்த தாவரங்களில் வேர், இலை, தண்டு மற்றும் மலர்கள் அவற்றின் வெவ்வேறு பணிகளை மேற்கொள்கின்றன.
 
YCIND20220804_4089_Plant anatomy and physiology_01.png
தாவரங்களில் காணப்படும் அமைப்பு
பல்வேறுபட்ட கட்டமைப்புகளின் அடிப்படையில் தாவரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அணுக்கள் ஒன்றிணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. மூலக்கூறுகள் இணைந்து செல்களை உருவாக்குகின்றன. செல்கள் ஒன்றிணைந்து வெவ்வேறு திசுக்களை உருவாக்குகின்றன. திசுக்கள் உறுப்புகளை உருவாக்குகின்றன. உறுப்புகள் சிறப்புச் செயல்பாடுகளைச் செய்யும் ஒரு உறுப்பு அமைப்பை உருவாக்குகின்றன. மேலும் உறுப்பு அமைப்புகள் இணைந்து உயிரினங்களை உருவாக்குகின்றன.
 
DesignYCIND30.png
உயிரினங்களின் ஒருங்கமைவு
திசுக்கள், திசுத் தொகுப்புகள், அதன் வகைகள், வாஸ்குலார் திசுத் தொகுப்புஇரு விதையிலை மற்றும் ஒரு விதையிலை தாவர வேர், தண்டு, இலை பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் இந்த பாடம் நமக்கு உதவுகிறது.

கற்றல் நோக்கங்கள்:
 
இந்த பாடத்தின் முடிவில் நீங்கள் கற்றுக்கொள்ளவிருப்பது,
  • திசுக்கள் மற்றும் அதன் வகைகள்
  • திசுத்தொகுப்புகள்
  • இருவிதையிலைத் தாவர வேரின் உள்ளமைப்பு
  • ஒருவிதையிலைத் தாவர வேரின் உள்ளமைப்பு
  • இருவிதையிலைத் தாவரத் தண்டின் உள்ளமைப்பு
  • ஒருவிதையிலைத் தாவரத் தண்டின் உள்ளமைப்பு
  • இருவிதையிலைத் தாவர இலையின் உள்ளமைப்பு
  • ஒருவிதையிலைத் தாவர இலையின் உள்ளமைப்பு
  • இருவிதையிலைத் தாவர மற்றும் ஒருவிதையிலைத் தாவர இலைகளுக்கிடையேயான வேறுபாடுகள்