PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
முந்தைய பகுதிகளில், நிறை மற்றும் எடை பற்றி படித்தோம்.
 
இந்தப் பகுதியில், தோற்ற எடை பற்றி அறிந்துகொள்வோம்.
  
தோற்ற எடை (Apparent weight):
 
ஓய்வு நிலையில் உள்ள போது உள்ள நமது உண்மை எடை (actual weight), மேலே அல்லது கீழே நாம் நகரும் போது அதே மதிப்பில் இருக்காது.
 
ஒரு பொருளின் எடையானது புவிஈர்ப்பு விசை மட்டுமின்றி, இன்ன பிற விசைகளால் மாற்றம் ஏற்படும். இந்த எடை தோற்ற எடை என்றழைக்கப்படுகிறது.
 
இதைப் பற்றி கீழ் கண்ட ஒரு எடுத்துக்காட்டின் மூலம் காண்போம்.
 
'\(m\)' நிறை கொண்ட ஒருவர் மின்தூக்கியில் மேலும் கீழுமாக நகர்வதாக கொள்வோம். அவரது எடை (\(W\))என்பது ஓய்வு நிலையில் அவர் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை ஆகும். இது மின் தூக்கியின் தரைப்பரப்பின் கீழ் நோக்கி செங்குத்தாக செயல்படும்.
 
51.png
 
அவரது எடைக்கு சமமான எதிர்விசை மின் தூக்கியின் தரைப்பரப்பில் இருந்து செங்குத்தாக மேல்நோக்கி செயல்படுகிறது. இது தோற்ற எடை மதிப்பிற்கு (\(R\)) சமமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
 
மின்தூக்கியின் நகர்விற்கேற்ப, அவரது தோற்ற எடை மதிப்பு எவ்வாறு மாறுபடுகிறது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வெவ்வேறான விவரிக்கிறது.
 
நிலை 1: மின்தூக்கி \(a\) என்ற முடுக்க மதிப்பில் மேலே நகர்கிறது.
 
\(R\ –\ W\ =\ F_\text{தொ}\ =\ m \times a\)
 
\(R\ =\ W\ +\ (m \times a\)
 
\(R\ =\ (m \times g)\ +\ (m \times a)\)
 
\(R\ =\ m \times (g+a)\)
 
\(W\ =\ m \times g\)
 
எனவே, \(R\ >\ W\)
 
தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடையை விட அதிகம்.
 
நிலை 2: மின்தூக்கி \(a\) என்ற முடுக்க மதிப்பில் கீழே நகர்கிறது.
 
\(W\ –\ R\ =\ F_\text{தொ}\ =\ m \times a\)
 
\(R\ =\ W\ -\ (m \times a\)
 
\(R\ =\ (m \times g)\ -\ (m \times a)\)
 
\(R\ =\ m \times (g-a)\)
 
\(W\ =\ m \times g\)
 
எனவே, \(R\ <\ W\)
 
தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடையை விட குறைவு.
 
நிலை 3: மின்தூக்கி ஓய்வில் உள்ளது (\(a\ =\ 0\)). முடுக்கம் சுழியாகும்.
 
\(W\ –\ R\ =\ F_\text{தொ}\ =\ m \times a\)
 
முடுக்கம் சுழியாகும், \(a\ =\ 0\)
 
\(W\ –\ R\ =\ F_\text{தொ}\ =\ 0\)
 
\(W\ -\ R\ =\ 0\)
 
\(W\ =\ R\)
 
தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடைக்கு சமம்.
 
நிலை 4: மின்தூக்கி புவிஈர்ப்பு முடுக்க மதிப்பில் கீழே தடையின்றி விழுகிறது (\(a\ =\ g\)).
 
\(R\ =\ W\ -\ m \times a\)
 
\(R\ =\ (m \times g)\ -\ (m \times a)\)
 
\(a\ =\ g\)
 
\(R\ =\ m \times (g–g)\)
 
\(R\ =\ 0\)
 
தோற்ற எடையின் மதிப்பு சுழியாகும்.