PDF chapter test TRY NOW

முந்தைய பகுதிகளில், புவியின் நிறை மற்றும் புவி ஈர்ப்பு முடுக்க மாற்றம் பற்றி படித்தோம்.
 
இந்தப் பகுதியில், நிறை மற்றும் எடை பற்றி அறிந்துகொள்வோம்.
  
நிறை மற்றும் எடை:
 
நிறை:
 
நிறை என்பது பொருட்களின் அடிப்படை பண்பாகும். பொருட்களில் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவே அதன் நிறை எனப்படும். இதன் அலகு கிலோகிராம் ஆகும்.
 
எடை:
 
பொருளின் எடை என்பது அதன் மீது செயல்படும் ஈர்ப்பு விசையின் மதிப்பு ஆகும்.
 
\(\text{எடை}\ ( W)\ =\ \text{நிறை}\ (m)\ \times \text{புவி ஈர்ப்பு முடுக்கம்}\ (g)\)
 
எடை ஓர் வெக்டார் அளவாகும். எடை எப்போதும் புவியின்மையத்தை நோக்கி செயல்படும். அதன் அலகு நியூட்டன் (\(N\))
 
புவிஈர்ப்பு முடுக்கத்தை பொறுத்து எடையானது மாறுபடும். புவியில் இடத்திற்கு இடம் புவிஈர்ப்பு முடுக்கமதிப்பு மாறுபடுவதால், எடையின் மதிப்பும் இடத்திற்கு இடம் மாறுபடும்.
 
துருவப்பகுதியில் பொருட்களின் எடை அதிகமாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் குறைவாக இருக்கும்.
 
நிலவில் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு \(1.625\ \text{மீவி}^{-2}\) ஆகும். இது புவியின், ஈர்ப்பு முடுக்கத்தில் \(0.1654\) மடங்கிற்கு சமமான அளவாகும்.
 
\(60\ \text{கிகி}\) நிறையுள்ள ஒருவரின் எடை.
 
பூமியில், \(W\ =\ m \times g\ =\ 60 \times 9.8\ =\ 588\ N\)
 
நிலவில்,  \(W\ =\ m \times g\ =\ 60 \times 1.625\ =\ 97.5\ N\)
 
ஆனால் அவரது நிறை மதிப்பு (\(60\ \text{கிகி}\)) புவியிலும் நிலவிலும் மாறாது இருக்கும்.