PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
முந்தைய பகுதிகளில், \(g\) மற்றும் \(G\) இவற்றிற்கிடையே உள்ள தொடர்பு பற்றி படித்தோம்.
 
இந்தப் பகுதியில், புவியின் நிறை மற்றும் புவி ஈர்ப்பு முடுக்க மாற்றம் பற்றி அறிந்துகொள்வோம்.
 
புவியின் நிறை (M):
 
கீழே கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடு ‘\(g\)’ மற்றும் ‘\(G\)’ இவற்றிற்கிடையே உள்ள தொடர்பினை அளிக்கிறது.
 
\(g\ =\ \frac{G \times M}{R^2}\)
 
இதில்,
 
\(g\) - புவிஈர்ப்பு முடுக்கம்
 
\(G\) - ஈர்ப்பியல் மாறிலி
 
\(M\) - புவியின் நிறை
 
\(R\) - புவியின் ஆரம்
 
சமன்பாடில் இருந்து,
 
புவியின் நிறை,  \(M\ =\ \frac{g \times R^2}{G}\)
 
\(g\), \(R\) மற்றும் \(G\) ன் மதிப்புகளை பிரதியிட,
 
\(M\ =\ \frac{9.8 \times 6378}{6.674 \times 10^{-11}}\)
 
\(M\ =\ 5.972 \times 10^{24}\)
 
புவி ஈர்ப்பு முடுக்க மாற்றம்:
 
புவிஈர்ப்பு முடுக்கம் \(g\) ன் மதிப்பு பூமியின் ஆரத்தை சார்ந்து அமையும் (\(g\ \propto \frac{1}{R^2}\)).
 
நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் ஆரம் அதிகமாக உள்ளதால், ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு குறைவாக இருக்கும். துருவப் பகுதியில்ஆர மதிப்பு குறைவாக உள்ளதால், ஈர்ப்பு முடுக்கம் அதிகமாக இருக்கும்.
 
நாம் புவியின் தரைப்பகுதியில் இருந்து உயரச் செல்லச் செல்ல புவி ஈர்ப்பு முடுக்கம் படிப்படியாக குறையும். அதேபோல் புவியின் அடி ஆழத்திற்கு செல்லச் செல்ல புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு குறைகிறது. புவியின் மையத்தில் ‘\(g\)’ ன் மதிப்பு சுழியாகும் (இப்பகுதியினைப் பற்றி இன்னும் விரிவாக உயர்வகுப்பில் படிக்கலாம்).