![](http://uploads.cdn.yaclass.in/upload/pumpa/img_4.png)
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅட்டைகள் தோல் மூலம் சுவாசிக்கின்றன. உடற்சுவரின் இரண்டாவது அடுக்கான புறத்தோலில் மெல்லிய இரத்தக் குழல் தந்துகிகள் உள்ளன. இவை நெருக்கமான வலை போன்ற அமைப்பில் உள்ளது. தந்துகிகளின் உள்ளே இரத்த உடற்குழி திரவம் நிரம்பி உள்ளது.
ஒரு பொருள் அதன் அடர்வு மிகுந்த பகுதிகளில் இருந்துஅடர்வு குறைந்த இடங்களுக்கு செரிவடர்த்தி சரிவுக் காரணமாக நகர்தல் பரவல் முறை கடத்துதல் எனப்படும். ஒட்டுமொத்த மூலக்கூறுகளும் சமனிலையை எட்டும் வரை பரவல் முறையில் இடம்பெயரும்
அட்டைகளின் சுவாசப் பரிமாற்றம் பரவல் முறையில் நடக்கிறது.
அதாவது நீரில் கரைந்துள்ள ஆச்சிஜன் \(O_2\) தோல் மூலம் இரத்த உடற்குழி திரவத்தினுள் பரவுகிறது. அதே வழியில் கார்பன் டை ஆக்ஸைடு \(CO_2\) உடலுக்கு வெளியே பரவுகிறது.
![YCIND20220901_4408_Structural organisation of animals_03.png](https://resources.cdn.yaclass.in/11c88710-0f7e-4daf-bf20-56597be4de0d/YCIND202209014408Structuralorganisationofanimals03w400.png)
பரவல் முறையில் சுவாசிக்கும் ஹிருடினேரியா
முயூகஸ் (mucus) அல்லது கோழைச் சுரப்பின் மூலம் அட்டையின் தோல் ஈரமாகவும் வழவழப்பாகவும் பராமரிக்கப்படுகிறது. உடல் உலர்ந்து போகாமல் இருக்க உதவுகிறது.