PDF chapter test TRY NOW
அட்டைகளில் உண்மையான இரத்தக் குழாய்கள் இல்லை. உடற்குழி மண்டலமும் அங்கு காணப்படும் திரவமும் மாற்றமடைந்து சுற்றோட்ட மண்டலமாக இயங்குகிறது.
அட்டையில் காணப்படும் உடற்குழி, இரத்த உடற்குழி மண்டலம் என அழைக்கப்படுகிறது. உடற்குழியினுள் காணப்படும் இரத்தம் போன்ற திரவம் , இரத்த உடற்குழி திரவம் எனவும் அழைக்கப்படுகிறது.
இரத்த உடற்குழி கால்வாய்கள்:
இரத்தக் குழாய்களுக்கு பதிலாக நீண்ட கால்வாய்கள் உள்ளன. இந்தக் கால்வாய்களுக்குள் இரத்த உடற்குழி திரவம் நிரப்பப்பட்டுள்ளது.
இதுவே இரத்த உடற்குழி கால்வாய்கள் ஆகும். அட்டையின் சுற்றோட்ட மண்டலத்தில் மொத்தம் நான்கு இரத்த உடற்குழி கால்வாய்கள் உள்ளன.அவை,
உடற்குழி திரவத்தில் ஹீமோகுளோபின் உள்ளது.
1. உணவுப் பாதையின் மேல் புறம் அமைந்துள்ள கால்வாய்
2. உணவுப் பாதையின் கீழ்ப்புறம் அமைந்துள்ள கால்வாய்
3. உணவுப் பாதையின் வலப்புறம் அமைந்துள்ள கால்வாய்
4. உணவுப் பாதையின் இடப்புறம் அமைந்துள்ள கால்வாய்
இந்த நான்கு கால்வாய்களும் உடலின் கீழ்புறத்தில் \(26\)வது கண்டத்தில் ஒன்றாக இணைகிறது. உணவுப்பாதையின் இருபுறமும் அமைந்துள்ள கால்வாய்கள் அவற்றின் உட்புறத்தில் வால்வுகளைக் கொண்டு இதயம் போன்று செயல்படுகின்றன.