
PUMPA - SMART LEARNING
மதிப்பெண்கள் எடுப்பது கடினமா? எங்கள் AI enabled learning system மூலம் நீங்கள் முதலிடம் பெற பயிற்சியளிக்க முடியும்!
டவுன்லோடு செய்யுங்கள்முழுமையடைந்த அட்டையின் நரம்பு மண்டலமானது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை,
1. மைய நரம்பு மண்டலம்
2. பக்கவாட்டு நரம்பு மண்டலம்
3. பரிவு நரம்பு மண்டலம்

அட்டையின் நரம்பு மண்டலம்
அட்டையின் மைய நரம்பு மண்டலத்தில் நரம்பு வளையம், ஓரிணை வயிற்றுப்புற நரம்பு நாண் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
நரம்பு வளையம் தொண்டையைச் சூழ்ந்துள்ளது. நரம்பு வளையத்தில் தொண்டை மேல் நரம்புத்திரள், தொண்டைச் சுற்று நரம்பு இணைப்பு மற்றும் தொண்டை கீழ் நரம்புத் திரள் ஆகிய நரம்புகள் உள்ளன.
தொண்டை மேல் நரம்புத்திரள் ஒன்றிணைந்து மூளையை உருவாக்குகின்றன.
தொண்டை கீழ் நரம்புத்திரள் தொண்டையின் அடிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது நான்கு இணை நரம்புத் திரள்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டதாகும்.