PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நெப்ரீடியா:
 
நெப்ரீடியாக்கள் சிறிய அளவிலான, சுருண்ட, இணை குழல்கள் ஆகும். இவை அட்டையின் உடலில் கண்டவாரியாக அமைந்துள்ளன. இவை \(17\) இணைகளாக உள்ளன. நெப்ரீடியாக்கள் செரிமானமாகாத நைட்ரஜன் கழிவுகள் மற்றும் தண்ணீர் ஆகிவற்றை வெளியேற்ற உதவுகிறது.
 
Important!
நெப்ரீடிய சுரப்பிகள் மற்றும் செல்கள் கழிவுப் பொருட்களை அட்டையின் இரத்த உடற்குழி திரவத்தில் இருந்து பிரிக்கின்றன.
இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவு பொருட்கள், சிறுநீர்ப்பையில் அல்லது வெசிகல்ஸ் (Vesicles) இல் சேமிக்கப்பட்டு பின்னர் நேப்ரீடியத்துளைகள் மூலம் வெளியேற்றப்படுகின்றன.
 
நெப்ரீடியத்துளைகள்:
 
\(6\) முதல் \(22\) வரையான கண்டங்களில் நெப்ரீடியத்துளைகள் இடம்பெற்றுள்ளன. நெப்ரீடியங்கள், நெப்ரீடியத்துளைகள் மூலம் அட்டையின் உடலுக்கு வெளியே திறக்கின்றன.
இவ்வாறு, அட்டையில் கழிவு நீக்கம் நடைபெறுகிறது.