PDF chapter test TRY NOW

முயல் உண்மையான உடற்குழி உடைய விலங்காகும். உடற்குழியானது மேற்புறம் மார்பறையாகவும், கீழ்புறம் வயிற்றறையாகவும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு அறைகளுக்கும் குறுக்குத் தடுப்பாக , உதரவிதானம் அமைந்துள்ளது.
 
YCIND20220901_4408_Structural organisation of animals_08.png
முயலின் உடற்கூறியல்
 
உதரவிதானம்:
 
இது பாலூட்டிகளில் மட்டுமே காணப்படும் உறுப்பாகும். நுரையீரலுக்குக் கீழே அமைந்திருக்கும் இவ்வுறுப்பானது மூச்சை உள்ளிழுக்கும் போது சுருங்கி, மூச்சை வெளிவிடும் போது விரிவடைந்து, பாலூட்டிகளின் சுவாசம் சார்ந்த இயக்கங்களுக்குத் துணைப் புரிகின்றன.
 
மார்பறை:
 
இதயம், நுரையீரல், மூச்சுக்குழாய், உணவுக்குழாயின் முன்பகுதி போன்றவை மார்பறையில் உள்ளன.
 
வயிற்றறை:
 
இவ்வறை, பெரிதாகவும் முக்கிய செரிமான மற்றும் இனப்பெருக்க உறுப்பு மண்டலங்களையும் கொண்டிருக்கிறது. ஐந்து மடல்களைக்கொண்ட கல்லீரல் உதரவிதானத்தின் குழிவிடத்தில் அமைந்துள்ளது.கல்லீரல் மடல் ஒன்றை ஒட்டி பித்தப்பை அமைந்துள்ளது.கல்லீரலுக்கு அருகில் அமைந்துள்ள  இரைப்பையினுள்,  உணவுக்குழாய் திறக்கிறது. மண்ணீரல் வயிற்றின் வலப்புற ஓரத்தில் ஒட்டிக்கொண்டுள்ளது.
 
வயிறு அல்லது இரைப்பையின் தொடர்ச்சியாக நீளமான குடல், சுருண்டு வயிற்றறை முழுவதையும் நிரப்பியுள்ளது. சிறுகுடலில் கணையம் இணைந்துள்ளது. இரண்டு சிறுநீரகங்களும் வயிற்றின் பின்புறத்தில் அமைந்துள்ளது.
 
சிறுநீரகங்களின் தொடர்ச்சியாக சிறுநீர்க்குழாய் அதை சிறுநீர்ப்ப்பையுடன் இணைக்கிறது. அட்ரீனல் சுரப்பி சிறுநீரகங்களின் முன்புறத்தில் அமைந்துள்ளது. சிறுநீர்ப்பை, சிறுநீர்ப்புறவழி மூலம் வெளித்திறக்கிறது.
 
ஆண் முயலில் விந்தகங்களும், பெண் முயலில் அண்டகங்களும் அதைச் சார்ந்த நாளங்களும் இனப்பெருக்க உறுப்புகளாக அமைந்துள்ளன.