PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
முயலின் சீரண மண்டலம் உணவுப் பாதை மற்றும் சீரண சுரப்பிகளைக் கொண்டது.
உணவுப்பாதை
முயலின் உணவுப்பாதை நீளமான, மாறுபடுகின்ற சுற்றளவு கொண்ட குழல் ஆகும். இந்த உணவுக்குழல் வாய் தொடங்கி மலத்துளையில் முடிவடையும். பின்வரும் உறுப்புகள் உணவுப்பாதையில் அமைந்துள்ளன. 
 
YCIND20220901_4408_Structural organisation of animals_13.png
முயலின் செரிமான மண்டலம்
 
வாய்:
 
வாயானது, மென்தசையாலான  மேலுதடு மற்றும் கீழுதடால் சூழப்பட்டுள்ளது. குறுக்குப் பிளவாக அமைந்துள்ளது.இது வாய்க்குழியினுள் நீள்கிறது.
 
வாய்க்குழி:
 
இரு தாடைகளுக்கும் நடுவில் அமைந்துள்ளது.மேற்புறம் அன்னத்தாலும்,அடிப்புறம் தொண்டையாலும் சூழப்பட்டுள்ளது. தளப்பகுதியில் நாக்கு உள்ளது. தாடைகளில் பற்கள் உள்ளது. வாய்க்குழி தொண்டையைச் சென்றடைகிறது.
 
தொண்டை:
 
சிறியதாகவும், குறுகிய அளவிலும் இருக்கும் தொண்டை வாய்க்குழியை உணவுக்குழாயாகத் தொடரச் செய்கிறது. உணவுக்குழாய் இரைப்பையினுள் திறக்கிறது.
 
இரைப்பை:
 
நீண்ட குறுகிய அளவிலான விரிவடையக்கூடிய தசைகளைக் கொண்டு அமையப்பெற்ற இரைப்பை விலங்கின் உடலில் கழுத்து,மார்பறை,உதரவிதானம் ஆகிய உறுப்புகளைக் கடந்து வயிற்றறையினுள் அமைந்துள்ளது. இவை உணவுப் பாதையாக மட்டுமே பயன்படுகிறது.இரைப்பையினுள் செரிமானம் நடைபெறுவது இல்லை.
 
சிறுகுடல்:
 
இரைப்பையைத் தொடர்ந்து அமைந்துள்ள இப்பகுதி முன்சிறுகுடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜெஜுனம்) மற்றும் பின்சிறுகுடல் (இலியம்) என மூன்று பகுதிகளாகத் தொடர்கிறது.
 
குடல் நீட்சி:
 
சீக்கம் எனப்படும் குடல் வால் நீட்சி மெல்லிய சுவருடையதாய் பெருங்குடலும் சிறுகுடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.இங்கே காணப்படும் பாக்டீரியா, செல்லுலோசை செரிக்க உதவுகிறது.
 
பெருங்குடல்:
 
சிறுகுடலின் தொடர்ச்சியாக உள்ள பெருங்குடலானது,கோலன் மற்றும் மலக்குடல் என இரு பகுதிகளாக உள்ளது. கோலன் ஏறத்தாழ \(45\) செ.மீ நீளம் கொண்டது. மேலும், மலக்குடல் ஏறத்தாழ \(75\) செ.மீ நீளம் கொண்ட இக்குடல் பகுதி மலத்துளை மூலம் உடலுக்கு வெளியே திறக்கிறது. 
 
மலத்துளை:
 
உடலுக்கு வெளியே வாலின் அடியில் அமைந்துள்ள மலத்துளை கழிவுகளை வெளித்தள்ள உதவுகிறது.
 
YCIND20220907_4452_Divya - Structural organisation of animals 2_01.png
முயலின் உணவுப்பாதை
சீரண சுரப்பிகள்
உணவுப் பாதையில் அமைந்திருக்கும் சீரண சுரப்பிகள், சில நொதிகளைச் சுரக்கின்றன. இவ்வாறு சுரக்கப்படும் சீரண நொதிகள் உணவின் செரிமானத்திற்கு உதவுகின்றன. முயலின் உணவு மண்டலத்தில் காணப்படும் சீரண நொதிகள் பின்வருமாறு:
  1. உமிழ்நீர்ச் சுரப்பிகள்
  2. இரைப்பைச் சுரப்பிகள்
  3. கல்லீரல்
  4. கணையம்
  5. சிறுகுடல் சுரப்பிகள்