PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அழுத்தும் தன்மை என்பது, ஒரு பொருளில் அழுத்தத்தைக் கொடுக்கும் பொழுது, அதன் பருமனளவில் எவ்வளவு மாறுகிறது என்ற அளவே ஆகும்.
பருப்பொருட்களில் நிலையான திண்மம் மற்றும் திரவத்தைக் காட்டிலும், வாயு நிலை அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும். அதற்கு காரணம், அதன் தூகள்களுக்கு இடையில் அதிக இடைவெளி இருப்பதே ஆகும். உதாரணத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் காணவும்:
 
TCIND_220518_3760_1.png
மூன்று உறிஞ்சு குழாயை எடுத்து கொள்ளவும். அதில் சுண்ணாம்பு துகள்கள்,  நீர் மற்றும் காற்றினை  நிரப்பவும். இப்பொழுது பிஸ்டனை அழுத்தவும், அதன்பின், அதில் நடக்கும் மாறுதல்களைக் கவனிக்கவும்.
 
சுண்ணாம்பினால் அடைக்கப்பட்ட உறிஞ்சு குழாய்: இதனை அழுத்த முடியாது. ஏனென்றால், திண்மத்தின் துகள்கள் மிக நெருக்கமாக அமைந்திருக்கும்.
 
நீரினால் அடைக்கபட்ட உறிஞ்சு குழாய்: இதனை அழுத்துவது மிகவும் கடினம், நீர் எளிதில் நகரலாம். ஆனால், அது தனது பருமன் அளவை மாற்றது.
 
காற்றினால் அடைக்கபட்ட உறிஞ்சு குழாய்: இதனை அழுத்துவது எளிது. ஏனென்றால், காற்றின் துகள்களுக்கு இடைவெளி மிகவும் அதிகம்.
 
திண்மம். நீர்மம் மற்றும் வாயு நிலைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள்:
  
பண்புகள்
திண்மம்
நீர்மம்
வாயு
துகள்களின் அமைப்பு
சீரான அமைப்பு
ஒழுங்கற்ற அமைப்பு
ஒழுங்கற்ற அமைப்பு
பருமன்
குறிப்பிட்ட பருமன்
குறிப்பிட்ட பருமன்
குறிப்பிட்ட பருமன் கிடையாது
வடிவம்
குறிப்பிட்ட வடிவம் 
குறிப்பிட்ட வடிவம் கிடையாது
குறிப்பிட்ட வடிவம் கிடையாது
அடர்த்தி
துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி குறைவு
துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகம்
துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி மிக அதிகம்
விரவுதல்
குறைவு
அதிகம்
மிக அதிகம்
ஈர்ப்பு விசை
மிக அதிகம்
அதிகம்
குறைவு
துகள்களின் நகர்வு
நகராது
நகரும்
வேகமாக நகரும்
அழுத்தும் தன்மை
அழுத்த முடியாது
அழுத்துவது கடினம்
அழுத்துவது எளிது
 
நீர்மமாதல்:
அழுத்ததினால், வாயுக்களை நீர்மமாக மாற்றும் செயலின் பெயர் நீர்மமாதல் ஆகும்.
வாயு நிலையில் அழுத்தத்தைக் கொடுக்கும் பொழுது,  வாயு நிலையில் இருக்கும் மூலக்கூறுகள் நெருக்கமாக வரும். அப்படி வருவதனால் அதன் வெப்பநிலை குறைந்து, அதன் ஆற்றலும் குறையும். அப்படி ஆற்றல் குறையும் பொழுது வாயு நீர்மமாக மாறும்.
 
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில், வெப்பநிலை அதிகரிப்பதல் திண்மம் நீர்மமாக மாறுவதையும், நீர்மம் வாயுவாக மாறுவதையும் காணலாம். இதேப்போல, வெப்பநிலையைக் குறைப்பதானல் வாயு நீர்மமாகவும், நீர்மம் திண்மமாகவும் மாறும்.