PDF chapter test TRY NOW

பொருட்களைப் பிரித்தெடுத்தல் என்றால் என்ன?
பிரித்தெடுத்தல் என்பது, ஒருக் கலவையில் இருந்து அவற்றின் பல பகுதிப் பொருட்களைத் தனித்தனியே பிரிக்கும் முறையாகும்.
TCIND_220518_3760_9.png
 
TCIND_220518_3760_10.png
 
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக் கவனித்தோம் என்றால், எல்லாம் வேவ்வேறு இடத்தில் இருந்து பெறப்பட்டவை மற்றும் வேவ்வேறு பொருள்களின் கலவையாக இருக்கலாம். கலவை என்றாலே, அதனைப் பிரித்தே ஆக வேண்டும் என்றில்லை. காப்பி மற்றும் ஐஸ் கிரீம் இரண்டும் கலவைகளே. இவற்றைப் பிரிப்பதில் பயனில்லை. அதுவே, பூமியில் இருந்து கிடைக்கும் தாதுக்களை எடுத்துக் கொள்ளலாம். தாதுக்களும் ஒரு வகைக் கலவைகளே.
 
ஆனால், நாம் இந்தக் கலவையில் இருந்து தூய பொருளைப் பிரித்து எடுத்தால் தான் நாம் அதனைப் பயன்படுத்த முடியும். தாதுக்களில் இருந்து உலோகத்தைப் பிரித்து எடுப்பது என்பது பலப்படிகளை உள்ளடக்கியச் செயல்.
 
TCIND_220518_3760_4.png
 
எப்பொழுது பிரித்தெடுத்தல் தேவைப்படும்?
  1. கலவையில் இருந்து, மாசு மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருக்கும் போது.
  2. பிற பொருட்களில் இருந்து, நமக்குத் தேவையானப் பொருளைப் பிரித்தெடுக்க வேண்டுமென்றால்.
  3. அதிக சதவீத, தூய்மையானப் பொருள் வேண்டுமென்றால்.
    Example:
  • தங்கத்தாதுவில் இருந்து, தூயத்தங்கத்தைப் பிரித்தெடுக்கும் போது.
  • அரிசியில் இருந்து, கல்லைப் பிரித்தெடுக்கும் போது.
  • கச்சா எண்ணையில் இருந்து, பெட்ரோலைப் பிரித்தெடுக்கும் போது.
  • தானியங்களில் இருந்து, தண்டைப் பிரித்தெடுக்கும் போது.
  • தேநீரில் இருந்து, தேயிலையைப் பிரித்தெடுக்கும் போது.
  • மணலில் இருந்து, கற்களைப் பிரித்தெடுக்கும் போது.