PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நம்மைச் சுற்றியுள்ள எல்லாப் பொருட்களும் பருப்பொருட்கள் ஆகும். அதாவது, எது எடை உள்ளதாகவும் மற்றும் இடத்தை அடைத்து கொள்ளும் பண்புடையதாகவும் உள்ளதோ, அதனை நாம் பருப்பொருள் என்போம். நாம் சுவாசிக்கும் காற்றும் பருப்பொருள் ஆகும். பருப்பொருளின் சில உதாரணங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
 
BeFunky-collage.png
பருப்பொருள்களின் சில எடுத்துக்காட்டுக்கள்
பருப்பொருள் என்பது அணுக்களினால் ஆனது. அணு என்பது மிகவும் சிறிய துகள், அதனை நாம் வெறும் கண்களினாலோ அல்லது நுண்ணோக்கியினாலோ  கூடப் பார்க்க முடியாது.
ஆனால், இந்த சிறிய துகளைக் காணும் அளவிற்கு இன்றைய அறிவியல் தொழிநுட்பம் வளர்ந்து இருக்கின்றது. எலக்ட்ரான் நுட்ப நுண்ணோக்கியினாலோ (SEM) அல்லது ஊடுபுழை நுட்ப நுண்ணோக்கியினாலோ (TEM) அணுவின் அமைப்பைக் கண்டறியலாம்.
 
TCIND_220518_3760_2.png
  
அணு என்பது புரோட்டான் (P), எலக்ட்ரான் (E) மற்றும் நியூட்ரான் (N) போன்ற துகள்களினால் ஆனது. இதில்,
  • புரோட்டானும், நியூட்ரானும், அணுவின் உட்புறத்தில் அணுவின் கருவில் அமைந்து இருக்கும்.
  • எலக்ட்ரான் அணுக்கருவின் வெளிப்புற சுற்றுவட்டப்பாதையில் சுற்றிக்கொண்டு இருக்கும்.
பருப்பொருள் என்பது, நிறைய சிறு சிறுத் துகள்களினால் ஆனது.
 
TCIND_220518_3760_3.png
    Example:
  • ஒரு துளி நீரில் 1021 நீர் துகள்கள் உள்ளன.
  • நாம் பேனாவில் வைக்கும் ஒரு புள்ளியில் \(2\) லட்சம் துகள்கள் உள்ளன.
பருப்பொருட்களில் உள்ள துகள்களின் சிறப்புப் பண்புகள்:
  • துகள்களின் அளவு மிகவும் சிறியது.
  • அவற்றில் ஒன்று மற்றொன்றை ஈர்க்கும் தன்மை கொண்டது (ஈர்ப்பு விசை பருப்பொருளின் நிலைக்கு ஏற்ப வெவ்வேறாக மாறும்).
  • துகள்கள் சீரான வேகத்தில் கரும். 
  • துகள்களின் நடுவில் இடைவெளிகள் இருக்கும். இந்த இடைவெளி பருபொருட்களின் நிலைக்கு ஏற்ப மாறும்.