PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
 சில சமயங்களில், நாம் கடைகளில் வாங்கும் பொருட்களில், நமக்கு தேவையற்ற பொருட்களோ அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களோ இருக்க வாய்ப்பு உண்டு, இதனை நாம் கலப்படம் என்போம்.
உணவுக் கலப்படம் என்றால் என்ன?
 
நாம் உண்ணும் உணவு, கவனமின்மையினாலோ அல்லது சரியாக தயாரிக்கப்படவில்லை என்றாலோ, அது கலப்படமாக வாய்ப்பு உண்டு. கலப்படமான இந்த உணவை உண்பது, நம் உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடும். இதனால், நாம் உண்ணும் உணவில் உள்ள கலப்படம் குறித்த விழிப்புணர்வு நமக்குத் தேவை. எப்பொழுதும் கலப்படம் செய்யப்பட்டப் பொருட்கள் தூயப் பொருட்களின் தரத்துக்கும், பண்புக்கும் நிகராகாது.
 
நாம் உண்ணும் உணவில் உள்ள கலப்படத்தை அறிவது எப்படி?
 
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் வழியாக, நாம் உண்ணும் உணவில் கலப்படம் உள்ளதா, இல்லையா என்று அறியலாம்.
  • தரமற்ற உணவு .
  • விலைமலிவான உணவுப்பொருட்களினால் ஆன உணவு.
  • சுகாதாரமற்ற இடத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள்.
  • உடல் நலத்திற்கு, தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களினால் தயாரித்த உணவு.
உங்களுக்கு தெரியுமா?
  • எதிர்திசை சவ்வூட்டுப்பரவல் என்பது, அழுதத்தின் வழியாக, தண்ணீரில் உள்ள மாசுக்களை நீக்கி, குடிக்கத் தகுந்ததாய் மாற்றும் செயல் ஆகும்.
  • நம் வீட்டில் பயன்படுத்தும் நீர் வடிகட்டி, புற ஊதா கதிர்களின் வழியாக நீரில் உள்ள மசுவை அகற்றுகிறது . அதுமட்டுமல்லமல், நீரில் உள்ள, நமக்கு தீங்கு விளைவிக்கும்  கிருமிகளையும் கொல்கிறது