PDF chapter test TRY NOW

ரோபாட்டுகள் தானியங்கி இயந்திரங்கள் ஆகும். சில ரோபாட்டுகள் மனிதர்களை விட விரைவாகவும் துல்லியமாகவும், இயந்திர மற்றும் மீண்டும் மீண்டும் செய்ய கூடிய  பணிகளைச் செய்யும் திறன் கொண்டவை ஆகும். ரோபாட்டுகளால் ஆபத்தானப் பொருட்களை கையாளவும், பிற கோள்களை ஆராயவும் முடியும்.
 
robot26586991920.jpg
தானியங்கி ரோபாட்டுகள்
 
ரோபாட்’ என்னும் வார்த்தை செக்கோஸ்லோவிய வார்த்தையான "ரோபாட்டா" என்பதிலிருந்து பெறப்பட்டது. மேலும் ரோபாட்டுக்களை  அறிவியல் மற்றும் ஆய்வகங்களில் ‘ரோபாட்டிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
 
ரோபாட்டுகளால்  என்ன செய்ய முடியும்?
 
ரோபாட்டுகள் தங்கள் சுற்றுப்புறத்தை உணர்ந்து செயல்படும் திறன் கொண்டவை ஆகும். அவை நுட்பமான பொருட்களுடன் கூட வேலை செய்யும் திறன் கொண்டவை ஆகும். அதேவேளை அதிக அளவு விசையையும் செலுத்த முடியும். உதாரணமாக, ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலின்படி அவற்றால் கண் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள இயலும்.
 
ரோபாட்டுகள் எப்படி உணர்கின்றன?
 
ஒரு ரோபாட்டின் கண்களாகவும், காதுகளாகவும் மின்னணு உணர்விகள் இருக்கின்றன. ரோபாட்டில் இரண்டு வீடியோ கேமராக்கள் உள்ளன, அவை உலகத்தின் முப்பரிமாண காட்சியை வழங்குகிறது. மைக்ரோஃபோன்கள்  ஒலிகளைக் கண்டறியும். அழுத்த உணர்விகள், ரோபாட்டுக்கு தொடு உணர்வை வழங்குகின்றன.
Example:
ஒரு முட்டையை அல்லது கனமான பொருள் ஒன்றைத் தூக்கும்போது எவ்வாறு பிடிக்க வேண்டும் என உணர்த்துகின்றன.
அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கணினிகள் செய்திகளை அனுப்பவும் பெறவும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துகின்றன.