PDF chapter test TRY NOW

உயிரினங்களின் அமைப்பு அணுவிலிருந்து தொடங்கி உயிர்க்கோளம் வரை நீண்டுள்ளது. இதற்கு இடையில், பல நிலைகள் உள்ளன, அவை உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகள் இரண்டையும் உள்ளடக்குகியுள்ளன.
 
உயிரினங்கள் மிகச்  சிறிய அலகுகளால் ஆனவை. அவ்வடிப்படை அலகுகள் செல்கள் எனப்படும் . அவை நுண்ணியவை, மேலும் உயிரினங்களில் உடலில் ஏற்படும் அனைத்து அத்தியாவசிய செயல்களுக்கும், செயல்பாடுகளுக்கும் மூல காரணமாக விளங்குகின்றன.
உயிரணு என்பது உயிரினத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு அலகு ஆகும்.
அனைத்து உயிரினங்களிலும் உயிரணுக்களின் எண்ணிக்கை மாறுபடும். உயிரணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், உயிரினங்கள் ஒரு செல் உயிரிகள்  மற்றும் பல செல் உயிரிகள் என இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
ஒரு உயிரணுவால் ஆன உயிரினங்கள்  ஒரு செல் உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
Example:
அமீபா, பாரமீசியம் மற்றும் யூக்ளீனா
EuglenaAmoebaParamecium.png
யூக்ளீனா, அமீபா மற்றும் பாரமீசியம்
பல உயிரணுக்களால் ஆன உயிரினங்கள்  பல  செல் உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
Example:
மீன்கள், தவளைகள், ஊர்வன, பல்லிகள், பறவைகள் மற்றும் மனிதர்கள்.
BeFunky-collage (100).jpg
மேலிருந்து வலப்புறமாக: மீன், தவளை, பல்லி மற்றும் பறவை