PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சுவாச வாயுக்களின் பரிமாற்றம் (சுவாச வாயுக்களை மாற்றி கொள்ளும்) மற்றும் சுவாசித்தல் செயலில் ஈடுபடும் இதுவே சுவாச மண்டலம் ஆகும்.
  • சுவாச மண்டலம் என்பது நாசித்துளைகள், நாசிக்குழி, தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழல், கிளை மூச்சுக்குழல் மற்றும் நுரையீரல்கள் ஆகிய உறுப்புகளைக் கொண்டது.
  • சுவாச மண்டலத்தின் மூலம் தூய்மையான காற்றான \(O_2\) உள்ளிழுக்கப்பட்டு, பின்பு \(CO_2\) வெளிவிடப்படுகின்றது.
  • நுரையீரலில் காற்றுக்கும், இரத்தத்திற்கும் இடையே O2 மற்றும் CO2 பரிமாற்றம் நிகழ்வு நடைபெறுகிறது. குரல் வளைமூடி (எப்பிகிளாட்டிஸ்) என்ற அமைப்பு சுவாசப்பாதைக்குள் உணவுச் செல்வதை தடுக்கிறது.
YCIND20220816_4262_Human organ systems_12.jpg
சுவாச மண்டலம்
  
நுரையீரல்கள்
 
சுவாச உறுப்புகளில் முக்கியமானவை நுரையீரல்கள் ஆகும். இவை மார்பறையின் உள்ளே அமைந்துள்ளன. இதை பொதுவாக காற்றுக்குழாய் என்று அழைக்கப்படும். இங்கு சுவாச வாயுக்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது.
  • மூச்சுக்குழலானது குருத்தெலும்பு வளையங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. இது குரல்வளை மற்றும் தொண்டையை நுரையீரல்களுடன் இணைத்து காற்று செல்வதற்கு எளிதாக உள்ளது.
  • மூச்சுக்குழல் மார்பு அறையினுள் நுழைந்தவுடன் இரு மூச்சுக்கிளைக் குழல்களாகப் பிரிந்து வலது, இடது நுரையீரல்களுக்குள் நுழைந்து பல நுண்குழல்களாகப் பிரிந்து, முடிவில் நுண் காற்றுப்பைகளில் (ஆல்வியோலைகளில்) திறக்கிறது.
  • நுரையீரல்களைச் சுற்றி இரு அடுக்குகளைக் கொண்ட ஒரு பாதுகாப்புப் படலம் காணப்படும். இதற்கு ப்ளூரா (Pleura) என்று பெயர்.
  • வாயுக்களின் ஊடுருவல் (O2 மற்றும் CO2) நுண்காற்றுப்பையைச் சுற்றியுள்ள மெல்லிய சுவர் வழியாக நடைபெறுகிறது.
Important!
மனிதனின் ஒவ்வொரு நுரையீரலும் ஏறக்குறைய \(300\) மில்லியன் நுண் காற்றுப்பைகள் உள்ளன. கொட்டாவி விடுதல் மூலம் நாம் அதிக அளவு ஆக்ஸிஜனை உள்வாங்கி அதிக அளவு கார்பன்–டை–ஆக்சைடு வெளியிடுகிறோம்.