PUMPA - THE SMART LEARNING APP
Helps you to prepare for any school test or exam
Download now on Google Playஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் அதற்கு ஒரு இடம் தேவை. அந்த இடமே அதன் வாழிடம் ஆகும்.
சில தாவரங்கள் மலைவாழ் இடங்களில் வாழ்கின்றன, சில தாவரங்கள் சமவெளிகளில் வாழ்கின்றன மேலும் சில நீர்வாழ் இடங்களிலும் வாழ்கின்றது. அதைப் போன்று மலையில் காணப்படும் விலங்குகளும் ஆழ்கடலில் காணப்படும் விலங்குகளும் வேறுபட்டவை. எனவே, வாழிடங்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை:
தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் வெவ்வேறு வாழிடங்கள் உள்ளன.
- நீர் வாழிடம்
- நில வாழிடம்

நீர் வாழிடம்
- நீர் வாழிடம் என்பது நிரந்தரமாக நீர் நிறைந்த பகுதியையும், அவ்வப்போது நீர் நிறைந்த பகுதியையும் உள்ளடக்கியது.
- வாழிடங்கள் இருவகைப்படும். அவை: நன்னீர் வாழிடம் மற்றும் கடல் நீர் வாழிடம்.
- நீரானது நன்னீராக இருப்பின் நன்னீர் வாழிடம் என்றும், நீரானது கடல்நீர் அல்லது உப்பு நீராக இருப்பின் கடல் நீர் வாழிடம் என்றும் அழைக்கப்படுகிறது.

பலவகையான நீர் வாழிடங்கள்
1. நன்னீர் வாழிடம்
- நன்னீர் வாழிடத்தில் வாழும் தாவரங்கள் சில சிறப்பு தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. ஆகாயத் தாமரை, அல்லி, தாமரை ஆகியவை நன்னீர் வாழ் தாவரங்கள் ஆகும்.
- இத்தாவரங்கள் குளம் மற்றும் ஏரிகளில் மிதக்க ஏற்றவாறு, நீர்வாழ் தாவரங்களின் தண்டுகள் மற்றும் இலைகளில் காற்றறைகள் காணப்படுகின்றன.
Example:
ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள்

ஆறுகள்

ஏரிகள்

குளங்கள்