PDF chapter test TRY NOW

Important!
ஒரு தாவரத்தில் வேர் முக்கிய அச்சின் கீழ்ப் பகுதியாகும். இது நிலத்திற்குக் கீழே காணப்படும்.
வேரின் பண்புகள்:
  • வேர்களில் கணுக்களும், கணுவிடைப் பகுதிகளும் இல்லை.
  • அதன் நுனிப் பகுதியில் வேர்மூடி உள்ளது.
  • வேர் நுனிக்குச் சற்று மேற்பகுதியில் வேர்த்தூவிகள் ஒரு கற்றையாகக் காணப்படுகின்றன.
  • வேர்கள் நேர் புவிநாட்டம் உடையவை. அவை புவிஈர்ப்பு விசையினால் கீழ்நோக்கி வளர்கின்றன.
வேர்களின் பணிகள்:
  • வேர்கள் தாவரத்தை பூமியில் நிலை நிறுத்தி அதிக நிலைத்தன்மையுடன் காணப்படும்.
  • மண்ணிலிருந்து நீரையும், கனிமச் சத்துக்களையும் உறிஞ்சுகின்றது.
  • சில தாவரங்கள், அவை தயாரித்த எஞ்சிய உணவை அதன் வேர்களில் சேமிக்கின்றன.
Example:
கேரட், பீட்ரூட்
தாவரங்களின் வேர்த் தொகுப்புகள் இரண்டு வகைப்படும். அவை பின்வருமாறு:
  1. ஆணி வேர்த்தொகுப்பு
  2. சல்லி வேர்த்தொகுப்பு
корни_saknes_roots2.png
தாவரங்களின் வேர்த்தொகுப்பு
  
1. ஆணி வேர்த்தொகுப்பு
 
இந்த வேர்த்தொகுப்பானது விதையிலிருந்து முளைவேர் தொடர்ந்து வளர்ந்து ஆணிவேரை உண்டாக்குகின்றது. முளைவேர் தடித்த ஒரு முதன்மை வேரைக் (முதல்நிலை வேரை) கொண்டுள்ளது. இவ்வேரிலிருந்து துணை வேர்கள் தோன்றுகின்றன.
 
YCIND25052022_3809_Plant_TM.png
ஆணி வேர்த்தொகுப்பின் வகைகள்

இந்தத் துணை வேர்கள் இரண்டாம்நிலை வேர்களாகவும், மூன்றாம் நிலை வேர்களாகவும் உருவெடுக்கின்றன. பொதுவாக இரு வித்திலைத் தாவரங்களில் இவ்வகை வேர் காணப்படும்.
Example:
மாமரம், வேம்பு  மரம், அவரைச்செடி போன்ற இரு வித்திலைத் தாவரங்களில் காணப்படும்.
2. சல்லி வேர்த்தொகுப்பு
 
shutterstock_1146007472.jpg
சல்லி வேர்கள்
  
தண்டின் அடிப்பகுதியில் முதல்நிலை வேர், சிறிது காலத்தில் அழிந்து விடும் பின் சம பருமனுள்ள வேர்கள் கொத்தாகத் தோன்றி வளர்கின்றன. பெரும்பாலும் ஒரு வித்திலைத் தாவரங்களில் இவ்வேர்த்தொகுப்பு காணப்படும்.
Example:
நெல், புல், மக்காச் சோளம் போன்ற பல ஒரு வித்திலைத் தாவரங்களில் காணப்படும்.