PUMPA - THE SMART LEARNING APP
Helps you to prepare for any school test or exam
Download now on Google Playநிலப்பரப்பில் அமைந்துள்ள வாழிடங்கள் நில வாழிடங்கள் என அழைக்கப்படுகின்றன. உலகில் \(28\%\) நில வாழிடங்கள் உள்ளன.
- காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள் போன்றவை இயற்கையாக உருவாக்கப்பட்ட வாழிடங்கள் ஆகும்.
- பண்ணைகள், நகரங்கள் மற்றும் மாநகரங்கள் போன்றவை மனிதர்களால் உருவாக்கப்பட்ட வாழிடங்கள் ஆகும்.
- நில வாழிடங்கள் ஒரு கண்டத்தின் அளவிற்கு பெரியதாகவும் அல்லது தீவின் அளவிற்கு சிறியதாகவும் காணப்படும்.
Example:
பசுமை மாறாக் காடுகள், முட்புதர் காடுகள்.
நில வாழிடங்கள் மூன்று வகைப்படும்: அவை,
- காடுகள்
- பாலைவனங்கள்
- புல்வெளிகள்
Important!
- மாஸ்கள் மற்றும் லிவர்வோர்ட்ஸ்கள் \(470\) மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நிலவாழ்த் தாவரங்கள் ஆகும்.
- தென் அமெரிக்காவிலுள்ள அமேசான் மலைக் காடுகள் உலகிற்கு தேவையான ஆக்ஸிஜன் பாதியை உற்பத்தி செய்கின்றன.
1. காடுகள்
காடுகள் மிகப் பரந்த நிலப்பரப்பில் அதிகமான மரங்களைக் கொண்டுள்ளன.
- வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படும் காடுகள் வெப்ப மண்டலக்காடுகள் என்றும்,
- மித வெப்ப மண்டலத்தில் காணப்படும் காடுகள் குளிர் பிரதேச காடுகள் என்றும்,
- மலைப்பகுதிகளிலுள்ள காடுகளை மழைக்காடுகள் என்றும் வகைப்படுத்துகிறோம்.
Important!
இங்கு ஆண்டு சராசரி மழை அளவு \(25-200\) செ.மீட்டராக இருக்கும்.

காடுகள்
2. புல்வெளி வாழிடம்
இவ்வகை வாழிடத்தில் புற்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை மிகச்சிறியன முதல் மிக உயரமான புற்களைக் கொண்டுள்ளன. இப்புற்கள் \(2\) மீட்டர் உயரம் வளரக்கூடியவை.

சவானா புல்வெளி
3. பாலைவன வாழிடம்
- நீரின் அளவு மிகக் குறைவாக உள்ள வாழிடங்கள் பாலைவனங்கள் எனப்படும். இவை பூமியின் மிகவும் வறண்ட மற்றும் மிக குறைவான மழை பெறும் இடங்களாகும்.
- இங்கு ஆண்டின் சராசரி மழைப்பொழிவு (\(25\) செ.மீக்கும் கீழ்) குறைவாக இருக்கும். பூமியின் நிலப்பரப்பில் சுமார் \(20\) சதவீதம் பாலைவனங்கள் உள்ளன.

பாலைவனம்
Important!
இங்குள்ள தாவரங்கள் அதிக வெப்பம் மற்றும் குறைந்த அளவு நீர் இருப்பை எதிர்கொள்ள சில சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன.