PDF chapter test TRY NOW

செல் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
  1. செல்லைப் பாதுகாக்கும் வெளிப்புற செல்சவ்வு
  2. திரவ சைட்டோபிளாசம்
  3. உட்கரு
உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு பணிகள் உள்ளது போல ஒவ்வொரு செல்லுக்கும் தனித்தனி பணிகள் உள்ளன. அதாவது கண், இதயம், நுரையீரல், கை, குடல் என ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பணி உள்ளது போல, உடலைப் பராமரிக்க ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு பணி உள்ளது.
அவ்வாறு அந்த செல் இடம் பெற்றுள்ள உடல் உறுப்பைப் பொறுத்து அதன் உள்ளுறுப்புகள் மாறும். அவை நுண்ணுறுப்புகள் எனப்படும்.
செல் இடம் பெற்றுள்ள உறுப்பைப் பொறுத்து அதன் நுண்ணுறுப்புகளும் அதன் சிறப்புத் தன்மைகளும் மாறும்.
  
Design - YC IND.png
மனித உடல் செல்கள்
 
செல்லின் அளவு:
  • செல்கள் ஒரு மைக்ரோமீட்டர் அளவில் இருந்து சில சென்டிமீட்டர் வரை அளவில் மாறுபடும்.
  • ஒரு மைக்ரோமீட்டர் என்பது ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதி ஆகும்.
செல்கள் பொதுவாக மிகச் சிறியதாக இருப்பதால் அவற்றை வெறும் கண்களில் பார்க்க முடியாது. கூட்டு நுண்ணோக்கி மூலம் பெரிதுபடுத்தி பார்க்க முடியும்.
 
shutterstock_85391560.jpg
நரம்பு செல்
    Important!
  • பாக்டீரியா மிகவும் சிறியது. ஒரே செல்லால் ஆன இவை \(0.1 - 0.5\) மைக்ரோமீட்டர் மட்டுமே இருக்கும்.
  • ஒரே செல்லால் ஆன நெருப்புக் கோழியின் முட்டை \(170\) மி.மீ விட்டம் இருக்கும். வெறும் கண்களால் காண முடியும்.
  • மனித உடலில் உள்ள நரம்பு செல் மிகவும் நீளமான செல்லாக கருதப்படுகிறது.
உயிரினத்தின் அளவிற்கும் செல்லின் அளவிற்கும் தொடர்பு இல்லை.
Example:
யானையின் செல் சுண்டெலியின் செல்லை விட பெரிதாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை.