PDF chapter test TRY NOW

தாவர மற்றும் விலங்கு செல்கள் முப்பரிமாண அமைப்பு உடையவை. கீழே உள்ள படத்தில் நாம் செல்லின் முப்பரிமாண அமைப்பைக் காணலாம்.
 
YCIND_220629_3983_animal cell and plant cell.png
செல்லின் முப்பரிமாண அமைப்பு
 
செல்லின் முப்பரிமாண அமைப்பை காணும்போது நுண்ணுறுப்புகளின் அளவு, அமைவிடம் மற்றும் வடிவம் போன்றவற்றை அறிய இயலும்.  
செயல்பாடு 3
நோக்கம்:
 
இருபரிமாண மற்றும் முப்பரிமாண அமைப்பின் வேறுபாட்டை அறிதல்.
 
தேவையான பொருட்கள்:
 
பாலிதீன் பை, நீர், கோலிகுண்டு
 
செய்முறை:
  • பாலிதீன் பையில் நீரை ஊற்றி அதில் கோலிகுண்டை போடவும்.
  • அதனை பார்த்து நோட்டில் படமாக வரையவும்.
  • வட்ட வடிவில் வரைந்து இருந்தால் அது இருபரிமாணம்.
  • கோள வடிவில் வரைந்து இருந்தால் அது முப்பரிமாணம்.
முடிவு:
  • இப்போது இதனை சரியாக உணர்ந்து இருப்பீர்கள்.
  • விலங்கு செல்கள் எப்போதும் கோள வடிவில் தான் இருக்கும்.