PDF chapter test TRY NOW

மாற்றம்
மாற்றம் என்பது, ஒரு பொருள்  இயல்பான தன்னுடைய நிலையில் இருந்து, மற்றொரு புதிய நிலைக்கு மாறுவதே ஆகும். பொருளின் ஆரம்ப மற்றும் இறுதி நிலைகளுக்கு இடையே இருக்கும் வேறுபாட்டினையே மாற்றம் என்று கூறுகிறோம்.
நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்களில் சில,
  • வானிலையில் ஏற்படும் மாற்றம்.
  • பருவ நிலையில் ஏற்படும் மாற்றம்.
இந்த மாற்றங்கள் சில நேரங்களில் விரைவாகவும் நடைபெறும். உதாரணமாக,
  • காகிதம் தீப்பிடித்த உடன் எரிகிறது.
  • சமையல் செய்யும் போது காய்கறிகள் சில  நிமிடங்களில் வெந்துவிடுகின்றன.
சில மாற்றங்கள் மெதுவாக நடைபெறுகின்றன. உதாரணமாக,
  • பால் தயிராக மாற சில மணி நேரங்கள் ஆகின்றன.
  • இரும்பு ஆணி துருப் பிடிக்க சில நாட்கள் ஆகின்றன.
மாற்றம் பொதுவாக ஒரு பொருளின் பண்பில் ஏற்படுகிறது. ஒரு பொருளின் வடிவம், நிறம், வெப்பநிலை, நிலை, இயைபு போன்ற எந்தப் பண்பிலும் மாற்றம் நடைபெறலாம். சில மாற்றங்களை நாம் கண்ணால் காண முடிகிறது. சில மாற்றங்களைக் காண முடிவது இல்லை.
 
மாற்றங்களின் வகைகள்:
 
நம்மைச்சுற்றி உள்ள இயற்கையில் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன. மாற்றங்கள் நடைபெறும் விதம், காலம், அதன் மூலம் ஏற்படுத்தப்படும் விளைவு போன்றவற்றைப் பொறுத்து மாற்றங்கள் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை,
  • மெதுவான மற்றும் வேகமான மாற்றங்கள்.
  • மீள் மற்றும் மீளா மாற்றங்கள்.
  • இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள்.
  • விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள்.
  • இயற்கையான மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள்.
மெதுவான மற்றும் வேகமான மாற்றங்கள்
 
மாற்றம் நடைபெற எடுத்துக்கொள்ளப்படும் காலத்தினைப் பொறுத்து இது அறியப்படுகிறது.
 
மெதுவான மாற்றங்கள்
 
ஒரு சில மாற்றங்கள் நடைபெறும் போது  அதிகமான நேரம், அதாவது மணிகள் அல்லது நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் தேவைப்படுகின்றன. இந்த மாற்றங்களே மெதுவான மாற்றங்கள் ஆகும்.
Example:
நகம், முடி வளர்தல்.
பருவ நிலை மாற்றம்.
விதை முளைத்தல்.
வேகமான மாற்றங்கள்
 
சில மாற்றங்கள் நடைபெற குறைந்த அளவு நேரத்தினை அதாவது சில நொடிகள் அல்லது நிமிடங்களை எடுத்துக்கொள்கின்றன. இந்த மாற்றங்களே வேகமான மாற்றங்கள் ஆகும்.
Example:
பலூன் வெடித்தல்.
கண்ணாடி உடைதல்
பட்டாசு வெடித்தல்.
காகிதம் எறிதல்.
செயல் முறை:
 
1. செயல்: மனிதன் குழந்தை பருவத்தில் இருந்து பெரியவனாக வளர்வது. 
  
காண்பது: இதற்குப் பல ஆண்டுகள் தேவைப்படுகிறது. 
  
அறிவது: இது ஒரு மெதுவான மாற்றம்.
 
2. செயல்: இரும்பை நீருடன் சேர்த்தல்.
  
காண்பது: இரும்பு துருப் பிடித்து நிறம் மாறுவது. இதற்கு சில மாதங்கள் ஆகின்றன.
  
அறிவது: இது ஒரு மெதுவான மாற்றம்.
 
3. செயல்: மின் விளக்கினை ஒளிரச்செய்தல்.
  
காண்பது:  இது ஒரு நொடிப்பொழுதில் நடைபெறுகிறது.
  
அறிவது: இது ஒரு விரைவான மாற்றம் ஆகும்.
 
4. செயல் : பட்டாசு வெடித்தல்.
  
காண்பது: இது ஒரு நொடிப்பொழுதில் நடைபெறுகிறது.
  
அறிவது: இது ஒரு விரைவான மாற்றம் ஆகும்.
 
மீள் மற்றும் மீளா மாற்றங்கள்:
 
இது பெரும்பாலும் ஒரு பொருளின் வடிவத்தில் ஏற்படும் மாற்றத்தினால் நடைபெறுகிறது.
 
மீள் மாற்றம்:
 
மாற்றம் அடைந்த பொருள் மீண்டும் தன் பழைய நிலைக்கு செல்ல முடிந்தால் அது ஒரு மீள் மாற்றம் ஆகும்.
 
shutterstock_677906719.jpg
Example:
தொட்டால் சிணுங்கி தாவரம்.
ரப்பர் வளையம் நீளுதல்.
பனிக்கட்டி உருகுதல்.
மீளா மாற்றங்கள்:
 
சில மாற்றங்களின் போது மாற்றம் அடைந்த பொருள் மீண்டும் அதன் பழைய நிலைக்குச் செல்வது இல்லை. இதுவே மீளா மாற்றம் ஆகும்,
Example:
பால் தயிராக மாறுவது.
மாவிலிருந்து இட்லி தயாரிப்பது.
செயல்பாடு:
 
1. செயல் முறை:
  
செயல்: ஒரே காகிதத்தினைக் கொண்டுப் படகு, விமானம் போன்றவை செய்தல்.
 
காண்பது: இதில் ஒரே காகிதம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி புதிய வடிவம் உருவாக்கப்படுகிறது.
 
அறிவது: இது ஒரு மீள் மாற்றம்.
 
2. செயல் முறை:
 
i. செயல்: மெழுகுவர்த்தி எறிதல். 
 
காண்பது: உருகி ஒருப் புதிய வடிவத்தினை அடைகிறது. 
 
அறிவது: இது ஒரு மீளா மாற்றம். 
 
ii. செயல்: பாலூனை ஊசியால் குத்துதல். 
 
காண்பது: அது வெடித்து சிறிய துண்டுகளாக மாறுகிறது. 
 
அறிவது:  இது ஒரு மீளா மாற்றம்.