PUMPA - THE SMART LEARNING APP
AI system creates personalised training plan based on your mistakes
Download now on Google Playமனித உடல் இயங்க மூளை அவசியமான ஒரு உறுப்பு. அது போல கணினி இயங்க மையச்செயலகம் ஒரு அவசியமான பகுதி ஆகும். இது கணினியின் அனைத்து செயல்பாடுகளையும் செய்கிறது. இது கணினியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும். கணினியின் அனைத்து பகுதிகளையும் கட்டுப்படுத்துகிறது.

கணினியின் உள் கட்டமைப்பு
மையசெயலாக்கத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை முறையே,
- நினைவகம் (Memory Unit)
- கணிதத் தருக்கச் செயலகம் (ALU-Arithmetic Logic Unit)
- கட்டுப்பாட்டகம் (Control Unit)
ஒரு மனிதன் தனக்குத் தேவைப்படும் செய்திகளை, நிகழ்வுகளைத் தன் நினைவகத்தில் சேமித்து வைப்பதைப் போல், கணினியும் தன்னுள் கொடுக்கப்படும் தரவுகள் மற்றும் தகவல்களைச் சேமித்து வைக்கிறது. அதனையே கணினியின் நினைவகம் என்கிறோம்.
கணினியில் உள்ள நினைவகத்தை முதன்மை நினைவகம் (Primary Memory), இரண்டாம் நினைவகம் (Secondary Memory) என இரண்டாகப் பிரிக்கலாம்.
இதுமட்டுமல்லாது, கணினியின் மற்ற தற்காலிக நினைவகத்தைக் குறுவட்டு (Compact disk), விரலி (Pen drive) போன்றவற்றைக் கொண்டு மேலும் விரிவுபடுத்தலாம்.
கட்டுப்பாட்டகம் (Control Unit):
- இது கணினியின் எல்லாப் பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
- இதன் பணி, மென்பொருள் வாயிலாகக் கொடுக்கப்படும் கட்டளைகளை ஏற்று, அதற்கேற்றவாறு சமிக்ஞைகளை அனுப்பி வைக்கிறது.
- அனைத்து சாதனங்கள் அல்லது கணினிகளின் பாகங்கள் இந்த அமைப்பு மூலம் மட்டுமே தொடர்பு கொள்கின்றன.
கணிதத் தருக்கச் செயலகம் (ALU):
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற எல்லாவிதமான எண்கணித, தருக்கச் செயல்பாடுகளும் கணிதத் தருக்கச் செயலகத்தில் நடைபெறுகின்றன.