PDF chapter test TRY NOW
இப்பகுதியில் கந்தங்களின் ஈர்ப்பு விசை மற்றும் விலக்கு விசை பற்றி அறிந்துக் கொள்வோம்.
ஈர்ப்பு மற்றும் விலக்கு விசையில் காந்தங்களின் அமைப்பு
இரண்டு காந்தங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு படத்தில் காட்டியுள்ளப்படி இரண்டு காந்தங்களை வெவ்வேறு திசையில் வைக்க வேண்டும்.
எந்த பக்கம் காந்தங்கள் ஒன்றையொன்று ஈர்க்கிறது?
- எதிர் எதிர் துருவங்களை கொண்ட காந்தங்கள் அதாவது \(S-N\) மற்றும் \(N-S\) ஒன்றையொன்றுஈர்க்கின்றது.
எந்த பக்கம் ஒன்றையொன்று விலக்குகிறது?
- ஒத்த துருவங்களை கொண்ட கந்தங்கள் அதாவது, \( N-N \) மற்றும் \(S-S \) ஒன்றையொன்று விலக்குகின்றன.
நாம் காந்தங்களை உருவாக்குவோமா?
காந்தம் கொண்டு ஆணியை உராய்தல்
- ஓர் ஆணியையோ அல்லது சிறிய இரும்புத் துண்டையோ மேஜையின் மேல் வைக்க வேண்டும்.
- ஒரு சட்டகாந்தத்துடைய ஒரு முனையினை, ஆணி அல்லது சிறிய இரும்புத்துண்டின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை ஒரு திசையில் தேய்க்க வேண்டும்.
- தேய்க்கும் போது திசையோ அல்லது காந்த முனையோ மாற்ற கூடாது.
- \(30\) அல்லது \(40\) தடவை இப்படி செய்ய வேண்டும்.
- ஆணி அல்லது இரும்புத்துண்டு காந்தமாக மாறி விட்டதா? என்பதைக் கண்டுபிடிக்க அதன் அருகில் இரும்புத்தூள்கள் அல்லது குண்டூசியை எடுத்து செல்ல வேண்டும்.
- அவை காந்தம் ஆக்கப்பட்ட ஆணி அல்லது இரும்புத்துண்டுகளால் ஈர்க்கப்படுகிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.
- இல்லை எனில் இந்த முறையிலே மீண்டும் ஒரு முறை முயற்சித்து பார்க்க வேண்டும்.